திருப்பூர்: தூய்மை பணியாளர்களுக்கு அறிவித்த சிறப்பு ஊதியத்தை உடனடியாக வழங்க வேண்டும், என வலியுறுத்தி தூய்மைப் பணியாளர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.
திருப்பூர்: தூய்மை பணியாளர்களுக்கு அறிவித்த சிறப்பு ஊதியத்தை உடனடியாக வழங்க வேண்டும், என்பதை வலியுறுத்தி தூய்மைப் பணியாளர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.
கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்தாலும், தன்னலம் கருதாது பணியாற்றி வரும் தூய்மை பணியாளர்களுக்கு தமிழக அரசு சிறப்பு ஊதியம் வழங்கப்படும் என கடந்த மார்ச் 23 ஆம் தேதி அறிவித்திருந்தது.
அதன் அடிப்படையில் உடனடியாக சிறப்பு ஊதியத்தை வழங்க வேண்டுமெனவும், தூய்மை பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் மற்றும் ஒப்பந்த பணியாளர்களுக்கு நிலுவை சம்பள தொகையை உடனடியாக வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருப்பூரில் ஏஐடியுசி தொழிற்சங்கத்தின் சுகாதார பணியாளர்கள் சம்மேளனம் சார்பில் இன்று தூய்மைப் பணியாளர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.