கோவையில் தனிமனித இடைவெளியை பின்பற்றும் கொரோனா மாதிரி விழிப்புணர்வு சந்தையை உருவாக்கியுள்ள பொதுமக்கள்!

கோவை: கோவையில் தனிமனித இடைவெளியை பின்பற்றும் கொரோனா மாதிரி விழிப்புணர்வு சந்தையை கவுண்டம்பாளையத்தில் உள்ள நாச்சிகோனார் வீதி குடியிருப்போர் நல குழுவினர் உருவாக்கியுள்ளது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.


கோவை: கோவையில் தனிமனித இடைவெளியை பின்பற்றும் கொரோனா மாதிரி விழிப்புணர்வு சந்தையை கவுண்டம்பாளையத்தில் உள்ள நாச்சிகோனார் வீதி குடியிருப்போர் நல குழுவினர் உருவாக்கியுள்ளது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் விதமாக மத்திய மாநில அரசுகள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு நாடு முழுவதும் உள்ள அனைத்து சேவைகளும் நிறுத்தி வைக்கப்பட்டது. இருப்பினும் சென்னை போன்ற பெரு நகரங்களில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது.

இதற்கு முக்கிய காரணமாக அண்மையில் சென்னை கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டின் தொடர்பில் இருந்த அதிகம் பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், இது போன்று மக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் மக்கள் கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள் குறித்து கூறும் விதமாக கோவை கவுண்டம்பாளையத்தில் உள்ள நாச்சிகோனார் வீதி குடியிருப்போர் நல குழுவினர் கொரோனா மாதிரி விழிப்புணர்வு சந்தையை அந்த பகுதியில் உருவாக்கியுள்ளனர்.

இதில் அந்த பகுதியில் சந்தைக்கு வருபவர்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்க கோடுகள் வரைந்தும், ஒலி பெருக்கியில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களுக்கு சென்றால் எவ்வாறு பொருள்கள் வாங்குவது, கைகளை சுத்தம் செய்வது போன்றவற்றின் அவசியங்களை எடுத்து கூறுகின்றனர்.

இவ்வாறு அமைக்கப்பட்ட மாதிரி சந்தைகளில் உள்ள காய்கறிகளை அந்த பகுதி மக்களுக்கு இலவசமாக வழங்கி தொடர்ந்து கபசுர குடிநீரும் வழங்கி வருகின்றனர். சுமார் 100 குடும்பங்கள் வசிக்கும் ஒரே பகுதி மக்கள் இலவச காய்கறிகளை வழங்கி வெளியில் சென்றால் கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகளை கூறும் விதமாக அமைக்கப்பட்ட கொரோனா விழிப்புணர்வு மாதிரி சந்தை அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது.

Newsletter

கோவையில் சமூக நீதி விடுதி மாணவர்களுக்கான WhatsApp புகார் எண் அறிமுகம்

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார், சமூக நீதி விடுதிகளில் தங்கும் மாணவர்கள் தங்கள் புகார்களையும் பாதுகாப்பு குறைபாடுகளையும்...

சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராதம்

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு 39-ல் உள்ள சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய தனியார் நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராத...

கோவையில் புதிய கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழு: உரிமையாளருக்கு ₹50,000 அபராதம்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு எண் 8, காளப்பட்டி பிரதான சாலையில் கட்டப்படும் புதிய கட்டிடத்தில் சுகாதாரத் துறையி...

அமராவதி அணையில் நீர்மட்டம் 38.98 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 40.46 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. ஜூலை 3 நிலவரப்படி...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு ஆகியவற்றில் தென்மேற்கு பருவமழையால் நீர்வர...

வெள்ளப்பெருக்கு எதிரொலி: கோவை குற்றாலம் இன்று தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால் கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பொ...