ஊரடங்கில் ஏற்பட்டுள்ள தளர்வால் பொதுமக்களிடம் கைப்பற்றப்பட்ட இருசக்கர வாகனங்களை திரும்ப ஒப்படைக்கும் மாநகர போலீசார்!

கோவை: கோவை மாநகர காவல் எல்லைகளில் ஊரடங்கு தளர்வினால் மாநகர காவல்துறையினால் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை திரும்ப ஒப்படைக்கும் பணி நடைபெற்று வருகிறது.


கோவை: கோவை மாநகர காவல் எல்லைகளில் ஊரடங்கு தளர்வினால் மாநகர காவல்துறையினால் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை திரும்ப ஒப்படைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

உலகையே உலுக்கி வரும் கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனால் கோவை மாநகர காவல் எல்லைகளில் ஊரடங்கை கடைபிடிக்காமல் இருசக்கர வாகனங்களில் அனாவசியமாக சுற்றி திரிந்தவர்களின் வாகனங்கள் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டது.

இந்த நிலையில், தற்போது ஊரடங்கில் 50 சதவீதம் தளர்வு ஏற்பட்டு உள்ளதால் வழக்கம் போல வாகனங்கள் இயங்கத் தொடங்கியுள்ளது. 



இந்த நிலையில் மாநகர காவல் ஆணையாளர் உத்தரவின் பேரில் மாநகரில் உள்ள பல்வேறு காவல் நிலையங்களில் மக்களின் தேவைக்கிணங்க இருசக்கர வாகனங்கள் ஒப்படைக்கப்பட்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாக, கோவை ராமநாதபுரம் காவல் நிலைய ஆய்வாளர் முருகேசன் தலைமையில் ராமநாதபுரம் காவல் எல்லையில் பிடிக்கப்பட்ட இருசக்கர வாகனங்கள் சரிபார்க்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டு வருகிறது.

இந்த பணியானது தனிமனித இடைவெளியை பின்பற்றி நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவையில் சமூக நீதி விடுதி மாணவர்களுக்கான WhatsApp புகார் எண் அறிமுகம்

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார், சமூக நீதி விடுதிகளில் தங்கும் மாணவர்கள் தங்கள் புகார்களையும் பாதுகாப்பு குறைபாடுகளையும்...

சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராதம்

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு 39-ல் உள்ள சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய தனியார் நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராத...

கோவையில் புதிய கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழு: உரிமையாளருக்கு ₹50,000 அபராதம்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு எண் 8, காளப்பட்டி பிரதான சாலையில் கட்டப்படும் புதிய கட்டிடத்தில் சுகாதாரத் துறையி...

அமராவதி அணையில் நீர்மட்டம் 38.98 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 40.46 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. ஜூலை 3 நிலவரப்படி...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு ஆகியவற்றில் தென்மேற்கு பருவமழையால் நீர்வர...

வெள்ளப்பெருக்கு எதிரொலி: கோவை குற்றாலம் இன்று தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால் கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பொ...