வால்பாறை தொகுதிக்குட்பட்ட 50 ஆயிரம் குடும்பங்களுக்கு அதிமுக சார்பில் விலையில்லா நிவாரண பொருட்கள்; அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வழங்கினார்

கோவை: வால்பாறை தொகுதிக்குட்பட்ட 50 ஆயிரம் குடும்பங்களுக்கு அதிமுக சார்பில் விலையில்லா நிவாரண பொருட்களை உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ் பி வேலுமணி வழங்கினார்.


கோவை: வால்பாறை தொகுதிக்குட்பட்ட 50 ஆயிரம் குடும்பங்களுக்கு அதிமுக சார்பில் விலையில்லா நிவாரண பொருட்களை உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ் பி வேலுமணி வழங்கினார்.

பொள்ளாச்சி அடுத்துள்ள வால்பாறை தொகுதிக்குட்பட்ட 50 ஆயிரம் ஏழை எளிய மக்களுக்கு அதிமுக சார்பில் அரிசி உள்ளிட்ட மளிகை பொருட்கள் நிவாரணமாக வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த நிவாரண பொருட்களை இன்று ஏழை எளிய மக்களுக்கு வழங்கப்பட்டது.



தமிழக உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பொதுமக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கி தொடங்கி வைத்தார். மேலும் வால்பாறை மலைப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கும் 16 லாரிகள் மூலம் நிவாரண பொருட்கள் கொண்டு செல்லப்பட்டது அதையும் கொடியசைத்து துவக்கி வைத்தார். பொது மக்களுக்கு நிவாரண வழங்கி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தபடி வீட்டிலே இருக்கும் படி கேட்டுக் கொண்டார்.



இந்நிகழ்ச்சியில் உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் கஸ்தூரி வாசு, முன்னாள் எம்.பி மகேந்திரன், வால்பாறை கூட்டுறவு வங்கி தலைவர் வீ.அமீது, நகர செயலாளர் மயில் கணேசன், வாசு உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் சமூக நீதி விடுதி மாணவர்களுக்கான WhatsApp புகார் எண் அறிமுகம்

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார், சமூக நீதி விடுதிகளில் தங்கும் மாணவர்கள் தங்கள் புகார்களையும் பாதுகாப்பு குறைபாடுகளையும்...

சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராதம்

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு 39-ல் உள்ள சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய தனியார் நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராத...

கோவையில் புதிய கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழு: உரிமையாளருக்கு ₹50,000 அபராதம்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு எண் 8, காளப்பட்டி பிரதான சாலையில் கட்டப்படும் புதிய கட்டிடத்தில் சுகாதாரத் துறையி...

அமராவதி அணையில் நீர்மட்டம் 38.98 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 40.46 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. ஜூலை 3 நிலவரப்படி...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு ஆகியவற்றில் தென்மேற்கு பருவமழையால் நீர்வர...

வெள்ளப்பெருக்கு எதிரொலி: கோவை குற்றாலம் இன்று தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால் கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பொ...