நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் 9 பேரும் கொரோனா தொற்று குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் பாதிப்பு இல்லாத மாவட்டமாக தற்போது மாறியுள்ளது.

தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துவரும் நிலையில் சில மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு முற்றிலும் குணமடைந்துவருகிறது. அதன்வரிசையில் தற்போது நீலகிரி மாவட்டம் மாறியுள்ளது. இங்கு வெளிநாடு மற்றும் வெளிமாநிலத்திலிருந்து வந்த 1471 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுவந்த நிலையில் அவர்கள் அனைவரும் தற்போது விடுவிக்கப்பட்டுள்ளனர்.
அதே போன்று கொரோனா பாதிப்பு உறுதியான நிலையில் 9 பேர் நீலகிரி மாவட்டத்தில் சிகிச்சை பெற்றுவந்தனர். அதில் ஏற்கனவே 8 பேர் குணமடைந்து வீடுதிரும்பினர். மேலும் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த உதகை காந்தள் பகுதியை சேர்ந்தவரும் குணமடைந்து வீடு திரும்பியுள்ளார். இந்தநிலையில் செய்தியாளர்களை சந்தித்த மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தெரிவிக்கையில், நீலகிரி மாவட்டத்தில் 9 பேரும் பூரண குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் வேறு யாருக்கும் கொரோனா தொற்று அறிகுறி இல்லை என தெரிவித்துள்ளார்.
இதனால் 100 சதவீதம் பாதிப்பு இல்லாத மாவட்டமாக மாறியுள்ளது. இருந்த போதும் டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நபர்கள் அனைவரும், 28 நாட்கள் வீட்டில் தனிமைப்படுத்தப்படுவர் எனவும் தடை செய்யப்பட்ட பகுதிகள் தொடர்ந்து கண்காணிக்கப்படும் எனவும் ஆட்சியர் தெரிவித்துள்ளார். மாவட்டத்தில் தடை நீக்குவது குறித்து பின்னர் அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.