கோவை: கோவையில் காவல்துறை சார்பில் ஒயிலாட்டம் ஆடியும், பறை அடித்தும் கொரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், அனாவசியமாக ஊர் சுற்றுவதை தவிர்க்க காவல் துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். மேலும் கொரோனா குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளையும் நடத்தி வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக, கோவை சிங்காநல்லூர் காவல் துறையினர் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

கொரோனா விழிப்புணர்வு ஓவியத்தின் மீது பறையடித்தும், எமதர்மன் வேடமணிந்தும் கொரோனா பரவல் குறித்து எடுத்துரைத்தனர். மேலும் ஒயிலாட்டம் ஆடியும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.