நீலகிரி: உதகையில் இன்று G 1 மேற்கு நகர் காவல் நிலையத்தில் 250 காவலர்கள், 50 ஊர்காவல் படையினர் மற்றும் களப்பணியாற்றும் ஓய்வு பெற்ற முன்னாள் இராணுவ அதிகாரிகளுக்கு முதற்கட்டமாக கொரோனா வைரஸ் பரிசோதனை நடைபெற்றது.

கொரோனோ வைரஸ் தாக்கம் காரணமாக தமிழகம் முழுவதும் உள்ள மாவட்டங்களில் அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் சார்பில் வைரஸ் அறிகுறி தென்பட்ட நபர்கள் வசிக்கும் பகுதியை தனிமைப்படுத்தி மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறையினர் மூலம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
நீலகிரி மாவட்டத்தில் மொத்தம் 9 பேருக்கு கொரோனா தொற்று தென்பட்டு நான்கு பேர் குணமடைந்து 5 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் உதகை அருகே காந்தல் பகுதியில் இருவருக்கு நோய் தொற்று ஏற்பட்டு அவர்கள் குணம் அடைந்தனர். அவர்கள் வசித்த வந்த காந்தல் பகுதியை மாவட்ட நிர்வாகம் தனிமைப்படுத்தி பாதுகாப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டிருந்த 34 காவல்துறையினருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
மேலும், இன்று உதகை மேற்கு நகர் காவல் நிலையத்தில் 250 காவலர்களுக்கும், 50 ஊர்க்காவல் படையினருக்கு மற்றும் களப்பணியாற்றும் ஓய்வு பெற்ற முன்னாள் இராணுவ அதிகாரிகளுக்கும் கொரோனா வைரஸ் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.