கோவை: சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்படி பல ஆண்டுகளாக கோவை மாநகராட்சியில் ஒப்பந்த பணியில் உள்ள ஊழியர்களை நிரந்தரமாக்க வேண்டும் என்கிற கோரிக்கையை முன்வைத்து தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு சிஐடியு சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கோவை மாநகராட்சியில் 500க்கும் மேற்பட்ட துப்புரவு பணியிடங்கள் நிரப்ப அறிவிப்பு வெளியிட்டு நடைபெற்ற நேர்காணல் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். இதில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்ததை தொடர்ந்து, சிஐடியு சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. அதில் ஒப்பந்த ஊழியர்களுக்கு முன்னுரிமை தர வேண்டும் என்கிற கோரிக்கையை முன்வைத்தது. துப்புரவு தொழிலாளர்களின் நியமனத்தை நிறுத்தி வைக்கவும், ஒப்பந்த ஊழியர்களுக்கு முன்னுரிமை வழங்கவும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்த நிலையில், கோவை மாநகராட்சியின் கவனத்தை ஈர்க்கும் வகையில் கண்டன ஆரப்பாட்டம் நடைபெற்றது. கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சங்க பொதுச்செயலாளர் கே.ரத்தினகுமார் தலைமை தாங்கினார். இதில் ஏராளமான துப்புரவு தொழிலாளர்கள் பங்கேற்று கோரிக்கை முழக்கங்களை எழுப்பினர்.