வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வயதில் Coimbatore பெரியநாயக்கன்பாளையம் உள்ள தனது வீட்டில் இயற்கை எய்தினார். வானம்பாடி இயக்கத்தின் முக்கிய தூணாக விளங்கிய அவரது இறுதிச் சடங்குகள் நாளை நடைபெறும்.


கோவை: இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு இன்று செவ்வாய்க்கிழமை காலை 10:30 மணிக்கு தனது 96வது வயதில் இயற்கை எய்தினார். Coimbatore பெரியநாயக்கன்பாளையத்தை அடுத்த பிரஸ் காலனியில் சிவா நகர் பகுதியில் உள்ள அவரது வீட்டில் இவர் காலமானார்.

1930ஆம் ஆண்டு கோவை மாவட்டம் உடுமலைப்பேட்டை பகுதியில் ஜெகநாதன் என்ற பெயரில் பிறந்த அவர், அது சமஸ்கிருதம் என்பதால் அதை தமிழ்ப்படுத்தி புவியரசு என்ற பெயரை தனக்கு சூட்டிக் கொண்டார். Coimbatore அரசு கலைக் கல்லூரியில் இன்டர்மீடியட் படித்த அவர், பேரூர் தமிழ் கல்லூரியில் புலவர் பட்டம் பெற்றார். பேரூர் தமிழ் கல்லூரி துவங்கப்பட்டதுடன் அதில் சேர்ந்து படித்த முதல் குழு மாணவர்களில் இவரும் ஒருவர்.

தமிழ் பேராசிரியர்களும் கவிஞர்களும் இணைந்து உருவாக்கிய வானம்பாடி இயக்கத்தில் முக்கிய தூண்களில் ஒன்றாக இவர் திகழ்ந்தார். மரபுக் கவிதையில் இருந்து புதுக்கவிதை நடைக்கு தமிழை மடை மாற்றிய அந்த இயக்கத்தில் அப்துல் ரகுமான், மு.மேத்தா, சிற்பி பாலசுப்ரமணியம், சிதம்பரநாதன் உள்ளிட்ட பல கவிஞர்களும் அறிஞர்களும் அங்கம் வகித்தார்கள்.

பல மேடை நாடகங்களை அரங்கேற்றியுள்ள தோழர் புவியரசு மிகச் சிறந்த போராளியும் ஆவார். தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா என மொழி வாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட போது எல்லை பிரச்சினைக்காக மா.போ.சி. யுடன் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டார்.

120க்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதியுள்ள இவர், அதிகமான மொழிபெயர்ப்பு நூல்களையும் எழுதியுள்ளார். ஆங்கிலம், ரஷ்யன், ஹங்கேறியன், மலையாளம், கனடா, ஹிந்தி ஆகிய மொழி நூல்களை தமிழாக்கம் செய்துள்ளார். இவர் எழுதிய கவிதை நூலுக்கு ஒருமுறையும், இவர் மொழி பெயர்த்த கவிதை நூலுக்கு ஒருமுறையும் என இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்றுள்ளார்.

திரைப்படத் துறையிலும் கால் பதித்துள்ள தோழர் புவியரசு மகாநதி, விருமாண்டி, ஹவுஸ்புல் போன்ற சினிமாக்களில் வசன கர்த்தாவாகவும் நடிகராகவும் பங்கெடுத்துள்ளார்.

தனது இறுதி காலத்தில் கோவைபெரியநாயக்கன்பாளையம் பிரஸ் காலனி பகுதியில் உள்ள தனது வீட்டில் வசித்து வந்த அவர், இன்று செவ்வாய்க்கிழமை காலை 10:30 மணிக்கு இயற்கை எய்தினார். அவரது இறுதிச் சடங்குகள் நாளை ஜூன் 1, புதன்கிழமை காலை 9 மணிக்கு பெரியநாயக்கன்பாளையத்தில் உள்ள பிரிக்கால் எரியூட்டு மயானத்தில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

LPF and Affiliated Unions Protest in Coimbatore Against Centre and State Governments’ Labour Policies

The Coimbatore District Labour Progressive Federation (LPF) Council and affiliated unions staged a protest near the Red...

EPFO Wage Ceiling Revision: Coimbatore Officials Explain Benefits for Formal Sector Employees

The Union Cabinet’s decision to raise the EPFO mandatory coverage wage ceiling from ₹15,000 to ₹25,000, effective Septem...

குனியமுத்தூர் துணை மின் நிலையத்தில் நாளை (23.09.2026) மின்தடை

கோவை குனியமுத்தூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக செப்டம்பர் 23, 2026 அன்று காலை 9 மணி ம...

கோவையில் கைவினைஞர் தனித்தேர்விற்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

2027 ஜூலை மாதம் DGT நடத்தும் அகில இந்திய தொழிற்தேர்வில் தனித் தேர்வர்களாக (Private Candidates) கலந்து கொள்ள விரும்புவோர்...

மலையடிபாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (23.09.2026) மின்தடை

கோவை மலையடிபாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நாளை (23.09.2026) காலை 9 மணி முதல் மதியம் 2 மண...

மைலம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (23.09.2026) மின்தடை

கோவை மைலம்பட்டி துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக செப்டம்பர் 23, 2026 அன்று காலை 9 மணி முதல...