வால்பாறையில் பழங்குடியின மக்களுக்கான மருத்துவ பரிசோதனை முகாம்

கோவை: கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள அடர்ந்த வனப்பகுதியில் வசிக்கும் ஆதிவாசி பழங்குடியின மக்களுக்கான மருத்துவ பரிசோதனை மற்றும் ஆலோசனை முகாம் நடைபெற்றது.

கோவை: கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள அடர்ந்த வனப்பகுதியில் வசிக்கும் ஆதிவாசி பழங்குடியின மக்களுக்கான மருத்துவ பரிசோதனை மற்றும் ஆலோசனை முகாம் நடைபெற்றது.



வால்பாறையில் உள்ள அடர்ந்த வனப்பகுதியில் செட்டில்மென்ட் என்றழைக்கப்படும் 23 ஆதிவாசி பழங்குடியின மக்கள் வசிக்கும் கிராமங்கள் உள்ளன. இவர்கள் மருத்துவ வசதிக்காக பல கிலோ மீட்டர் அடர்ந்த வனப்பகுதியை கடந்து வால்பாறை நகருக்கு வந்து சிகிச்சை பெற வேண்டியுள்ளது. இதன் காரணமாக அவர்களுக்கு மருத்துவ பரிசோதனை மற்றும் ஆலோசனை வழங்க சிறப்பு மருத்துவக் குழு நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் தலைமை மருத்துவர் பாபு லக்ஷ்மன் தலைமையில் அமைக்கப்பட்டுள்ளது.



இதன் ஒரு கட்டமாக, கல்லார் செட்டில்மென்டைச் சேர்ந்த 23 குடும்பத்தினருக்கு இரத்த அழுத்தம்.சர்க்கரை அளவு பொது மருத்துவ பரிசோதனைகள் நடைபெற்றன. மேலும், முகாமில் தேவையானவர்களுக்கு மருந்து மாத்திரைகள் வழங்கப்பட்டன.

இந்த முகாமில் மருத்துவர் பரத், வனவர் விஷ்ணு, கிராம நிர்வாக அலுவலர் விஜய் அமிர்தராஜ், தேயிலைத் தோட்ட அலுவலர்கள் பழங்குடியினத்தைச் சேர்ந்த மக்கள் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...

கோவையில் நாளை முதல் கோமாரி தடுப்பூசி முகாம் தொடக்கம் - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆகஸ்ட் 10 வரை கால் மற்றும் வாய் (கோமாரி) நோய் தடுப்பூசி முகாம் நடைபெறும். அனைத்த...

பொள்ளாச்சி MP கே.ஈஸ்வரசாமி கோவையில் ரூ.57 லட்சம் மதிப்பிலான நியாயவிலைக் கடைகள் மற்றும் அங்கன்வாடி மையம் திறப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியின் தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் கே.ஈஸ்வரசாமி, மேயர் கா....