குடியுரிமை சட்ட திருத்த மசோதா எதிர்ப்பு போராட்டம்; வ.உ.சி மைதானத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு

கோவை: குடியுரிமை பாதுகாப்பு திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடரும் போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், கோவை அவினாசி சாலையில் உள்ள வஉசி மைதானத்தில் எந்த நேரமும் மாணவர்கள் ஒருங்கிணையலாம் என்ற தகவலின் பேரில் போலீசார் மைதானத்தை சுற்றிலும் பாதுகாப்பை பலப்படுத்தி உள்ளனர்.

கோவை: குடியுரிமை பாதுகாப்பு திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடரும் போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், கோவை அவினாசி சாலையில் உள்ள வஉசி மைதானத்தில் எந்த நேரமும் மாணவர்கள் ஒருங்கிணையலாம் என்ற தகவலின் பேரில் போலீசார் மைதானத்தை சுற்றிலும் பாதுகாப்பை பலப்படுத்தி உள்ளனர்.

நாடு முழுவதும் குடியுரிமை பாதுகாப்பு திருத்த சட்ட மசோதாவிற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக கோவை மாநகரில் இந்திய மாணவர் சங்கத்தினர், அரசு கலைக் கல்லூரி மாணவர்கள், சட்டக்கல்லூரி மாணவர்கள், பிஎஸ்ஜி கல்லூரி மாணவர்கள், பிஷப் அப்பாசாமி கல்வியல் கல்லூரி மாணவர்கள் என தங்களின் போராட்டங்களை துவங்கியுள்ளனர்.



இந்த நிலையில், போராட்டத்தில் ஈடுபடும் மாணவர்கள் எந்த நேரமும் வ உ சி மைதானத்தில் ஒருங்கிணையலாம் என்ற சந்தேகத்தின் பேரில் போலீசார் வஉசி மைதானத்தை சுற்றிலும் பாதுகாப்பை பலப்படுத்தி உள்ளனர்.



அதே போல, நாளை கோவை மாநகரின் பல்வேறு முஸ்லிம் அமைப்புகள் மற்றும் சமூக அமைப்புகள் இணைந்து தங்களின் எதிர்ப்பை கடையடைப்பு, கருப்பு கொடி ஏற்றுதல், பொதுக்கூட்டம் ஆகியவற்றை நடத்த உள்ளனர். இந்த நிலையில் கோவை மாநகர் முழுவதும் பாதுகாப்பு பணிக்காக 2,500 போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

Newsletter

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...

கோவையில் நாளை முதல் கோமாரி தடுப்பூசி முகாம் தொடக்கம் - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆகஸ்ட் 10 வரை கால் மற்றும் வாய் (கோமாரி) நோய் தடுப்பூசி முகாம் நடைபெறும். அனைத்த...

பொள்ளாச்சி MP கே.ஈஸ்வரசாமி கோவையில் ரூ.57 லட்சம் மதிப்பிலான நியாயவிலைக் கடைகள் மற்றும் அங்கன்வாடி மையம் திறப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியின் தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் கே.ஈஸ்வரசாமி, மேயர் கா....

பொள்ளாச்சி எம்.பி. மேம்பாடு நிதியில் ரூ.57 லட்சம் மதிப்பில் புதிய நியாயவிலைக் கடைகள், அங்கன்வாடி மையம் திறப்பு

கோவை மாநகராட்சியின் தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில், பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.5...