2017-18 கல்வியாண்டில் படித்து முடித்த மாணவர்களுக்கு 3 மாதத்தில் மடிக்கணினி வழங்கப்படும் : கோவையில் அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு

கோவை : மூன்று மாதத்திற்குள் 2017-18 கல்வியாண்டில் படித்து முடித்த மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கப்படும் எனவும், கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் தற்போது 11,12-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.


கோவை : மூன்று மாதத்திற்குள் 2017-18 கல்வியாண்டில் படித்து முடித்த மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கப்படும் எனவும், கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் தற்போது 11,12-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

கோவை விமான நிலையத்தில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் இன்று மாலை செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, அவர் பேசியதாவது :- எல்லா துறைகளுக்கும் முன் மாதிரி மாநிலமாக தமிழகம் திகழ்கின்றது. 2017-18-ம் கல்வியாண்டில் 12-ம் வகுப்பு படித்து முடித்தவர்கள் தங்களுக்கு மடிக்கணிணி கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகின்றனர். மூன்று மாதத்திற்குள் 2017-18 கல்வியாண்டில் படித்து முடித்த மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கப்படும். தற்போது 11, 12-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு மடிக்கணினி முதலில் வழங்கப்படும். 

புதிய பாடதிட்டத்தில் படிக்கும் மாணவர்களுக்கு இப்போது மடிக்கணினி அவசியம் என்பதால் அவர்களுக்கு முன்னுரிமை கொடுத்து மடிக்கணினி வழங்கப்படுகிறது. தற்போது, 12-வது படிக்கும் மாணவர்களுக்கு படித்து முடித்து கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் உறுதுணையாக இருக்க வேண்டும். பள்ளி கல்வி துறையில் பல்வேறு புதிய திட்டங்கள் வரும் 2-ம் தேதி சட்டபேரவையில் அறிவிக்கப்பட இருக்கிறது, எனக் கூறினார். 

மேலும், அ.ம.மு.க.வில் இருந்த தங்கதமிழ்செல்வன் தி.மு.க.வில் இணைந்து இருப்பது குறித்த கேள்விக்கு, இதற்கு மின்துறை மற்றும் மீன் வளத்துறை அமைச்சர்கள் பதில் சொல்லுவார்கள் எனவும் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.‘

தொடர்ந்து, ஆசிரியர்களின் பழைய ஓய்வூதியம் குறித்த கோரிக்கை பற்றி அவர் பேசுகையில், "குறித்த கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் செங்கோட்டையன், 2004-ம் ஆண்டிலேயே புதிய ஒய்வூதிய திட்டம் குறித்து தெளிவாக சொல்லப்பட்டு இருக்கின்றது. அரசு நிதி நெருக்கடி இருப்பதாலும், எல்லாருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும். எல்லோரும் வாழ வேண்டும் என்ற அடிப்படையில் இந்த அரசு செயல்படுகிறது. புதிய பென்சன் திட்டம் தொடர்ந்து செயல்படும் என்பதை சூசகமாக தெரிவித்தார்.

Newsletter

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...