உதகை மலைரயில் எஞ்சின் கோளாரால் பாதி வழியில் நிறுத்தம் : சுற்றுலா பயணிகள் அவதி

கோவை : எஞ்சின் கோளாரால் உதகை மலை ரயில் பாதி வழியில் நிறுத்தப்பட்டதால் சுற்றுலாப் பயணிகள் அவதிக்குள்ளாகினர்.

கோவை : எஞ்சின் கோளாரால் உதகை மலை ரயில் பாதி வழியில் நிறுத்தப்பட்டதால் சுற்றுலாப் பயணிகள் அவதிக்குள்ளாகினர்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து தினந்தோறும் உதகைக்கு மலை ரயில் போக்குவரத்து இயக்கப்பட்டு வருகிறது. யுனஸ்கோ அந்தஸ்த்து பெற்ற உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்கபட்ட இந்த மலை ரயிலில் பயணித்து இயற்கை அழகினை கண்டு ரசிக்க உள்நாடுகள் மட்டுமின்றி, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும் முன்பதிவு செய்து மாத கணக்கில் காத்திருந்து பயணம் செய்து வருகின்றனர். 



இந்த நிலையில், இன்று காலை 130-க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகளுடன் மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூருக்கு மலை ரயில் புறப்பட்டு சென்றது. கல்லார் ரயில் நிலையத்தை அடைந்த போது மலை ரயில் எஞ்ஜினில் கோளாறு ஏற்பட்டு பாதி வழியிலேயே ரயில் நிறுத்தபட்டது. எஞ்ஜின் உந்து விசை குறைவு காரணமாக ஏற்பட்ட கோளாரால் தொடர்ந்து மலை ரயிலினை இயக்க முடியவில்லை. இதனையடுத்து, ரயில்வே உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கபட்ட பழுது நீக்கும் பணி நடைபெற்றது. இருப்பினும், அதனை சீர் செய்ய கூடுதல் நேரம் தேவைப்பட்டதால் ரயில் நிலையத்தில் பயணிகள் அனைவரும் இறக்கிவிடப்பட்டனர்.

பின்னர் இன்று காலை மேட்டுப்பாளையம் முதல் குன்னூர் இடையிலான ரயில் சேவை ரத்து செய்யபடுவதாக அறிவிக்கபட்டது. இதனையடுத்து, ரயில்வே நிர்வாகத்தின் ஏற்பாட்டில் அரசு பேருந்து வரவழைக்கப்பட்டு சுற்றுலா பயணிகள் அனைவரும் குன்னூருக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். இதனால், பாரம்பரியம் மிக்க மலை ரயிலில் பயணித்து இயற்கை அழகினை கண்டு ரசிக்க வந்த சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர். மலை ரயிலினை பொறுத்தவரை அடிக்கடி ரயில் பாதி வழியில் நிறுத்தப்படுவது தற்போது மீண்டும் அதிகரித்து வருவதால் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என வலியுறுத்தியுள்ளனர்.

Newsletter

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...