கோவை : எஞ்சின் கோளாரால் உதகை மலை ரயில் பாதி வழியில் நிறுத்தப்பட்டதால் சுற்றுலாப் பயணிகள் அவதிக்குள்ளாகினர்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து தினந்தோறும் உதகைக்கு மலை ரயில் போக்குவரத்து இயக்கப்பட்டு வருகிறது. யுனஸ்கோ அந்தஸ்த்து பெற்ற உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்கபட்ட இந்த மலை ரயிலில் பயணித்து இயற்கை அழகினை கண்டு ரசிக்க உள்நாடுகள் மட்டுமின்றி, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும் முன்பதிவு செய்து மாத கணக்கில் காத்திருந்து பயணம் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில், இன்று காலை 130-க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகளுடன் மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூருக்கு மலை ரயில் புறப்பட்டு சென்றது. கல்லார் ரயில் நிலையத்தை அடைந்த போது மலை ரயில் எஞ்ஜினில் கோளாறு ஏற்பட்டு பாதி வழியிலேயே ரயில் நிறுத்தபட்டது. எஞ்ஜின் உந்து விசை குறைவு காரணமாக ஏற்பட்ட கோளாரால் தொடர்ந்து மலை ரயிலினை இயக்க முடியவில்லை. இதனையடுத்து, ரயில்வே உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கபட்ட பழுது நீக்கும் பணி நடைபெற்றது. இருப்பினும், அதனை சீர் செய்ய கூடுதல் நேரம் தேவைப்பட்டதால் ரயில் நிலையத்தில் பயணிகள் அனைவரும் இறக்கிவிடப்பட்டனர்.
பின்னர் இன்று காலை மேட்டுப்பாளையம் முதல் குன்னூர் இடையிலான ரயில் சேவை ரத்து செய்யபடுவதாக அறிவிக்கபட்டது. இதனையடுத்து, ரயில்வே நிர்வாகத்தின் ஏற்பாட்டில் அரசு பேருந்து வரவழைக்கப்பட்டு சுற்றுலா பயணிகள் அனைவரும் குன்னூருக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். இதனால், பாரம்பரியம் மிக்க மலை ரயிலில் பயணித்து இயற்கை அழகினை கண்டு ரசிக்க வந்த சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர். மலை ரயிலினை பொறுத்தவரை அடிக்கடி ரயில் பாதி வழியில் நிறுத்தப்படுவது தற்போது மீண்டும் அதிகரித்து வருவதால் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என வலியுறுத்தியுள்ளனர்.