கோவை : தென் மேற்கு பருவமழையினால் நீர்வரத்து பெற்ற கோவை குற்றாலம் அருவி, புதுப் பொலிவுடன் விரைவில் சுற்றுலாப் பயணிகளின் பயன்பாட்டிற்கு விடப்பட இருக்கிறது.
கோவை : தென் மேற்கு பருவமழையினால் நீர்வரத்து பெற்ற கோவை குற்றாலம் அருவி, புதுப் பொலிவுடன் விரைவில் சுற்றுலாப் பயணிகளின் பயன்பாட்டிற்கு விடப்பட இருக்கிறது.

கோவை சாடிவயல் பகுதியில் அமைந்துள்ளது கோவை குற்றால அருவி. மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள இந்த அருவியில், ஆண்டு முழுவதும் நீர் வரத்து இருக்கும். இந்த அருவியில் குளித்து மகிழ தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும், கேரளா உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் வருவது வழக்கம். இந்த சூழலில், கடந்த இரு மாதங்களாக கடுமையான வறட்சி நிலவியதால் கோவை குற்றால அருவியில் நீர்வரத்து குறைந்தது. இதனை அடுத்து, காலவரையின்றி கோவை குற்றால அருவி மூடப்பட்டது. இதனால், நாள்தோறும் அங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

இந்த நிலையில், தற்போது தென்மேற்கு பருவமழை துவங்கி உள்ளது. கேரளா நீர்பிடிப்பு பகுதிகளில் தற்போது மழை பெய்து வருவதால், கோவை குற்றால அருவிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. தற்போது கோவை குற்றால அருவியில் சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக பல்வேறு புனரமைப்பு பணிகள் செய்யப்பட்டு விரைவில் சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட உள்ளனர். இதில், பயணிகள் சுற்றுலாப் பயணிகள் குளித்து மகிழ கான்கிரீட் தளங்களும், குழந்தைகளுக்கான நீச்சல் குளமும் அமைக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, விரைவில் சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்படுவார்கள் என போளுவாம்பட்டி வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.