சென்னை : அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் இருந்து அண்மையில் விலகிய அக்கட்சியின் முன்னாள் கொள்கை பரப்பு செயலாளர் தங்கதமிழ்செல்வன் நாளை தி.மு.க.வில் இணைய உள்ளார்.
சென்னை : அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் இருந்து அண்மையில் விலகிய அக்கட்சியின் முன்னாள் கொள்கை பரப்பு செயலாளர் தங்கதமிழ்செல்வன் நாளை தி.மு.க.வில் இணைய உள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.
அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் (அ.ம.மு.க.) பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரனுக்கு மிகவும் நெருக்கமாக இருந்தவர் தங்கதமிழ்செல்வன். அக்கட்சியின் கொள்கை பரப்பு செயலாளராகவும், தேனி மாவட்ட செயலாளராகவும் இருந்தார். தேனி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்டு தோல்வியை தழுவினார். இதற்கிடையே, தங்கதமிழ்செல்வனுக்கு டி.டி.வி.தினகரன் மீதும், அ.ம.மு.க. மீதும் அதிருப்தி ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால், அ.ம.மு.க.வில் இருந்து விலகி அ.தி.மு.க.வில் அவர் இணைய உள்ளதாகவும், இதற்காக அ.தி.மு.க.வை சேர்ந்த மூத்த அமைச்சர்களை ரகசியமாக சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் செய்திகள் வெளியாகியது. ஆனாலும் அவர் இந்த தகவல்களை தொடர்ந்து மறுத்து வந்தார்.
மேலும், அ.ம.மு.க. நிர்வாகி ஒருவரிடம், “உங்கள் அண்ணனை (டி.டி.வி.தினகரன்) இந்த மாதிரி அரசியல் செய்வதை நிறுத்த சொல், நான் விசுவரூபம் எடுத்தால் அழிந்து போய்விடுவீர்கள்,” என தங்கதமிழ்செல்வன் ஆவேசமாக பேசுவதாக உள்ளது. இந்த ஆடியோ சமூக வலைத்தளத்தில் வெளியான ஆடியோ தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையடுத்து, டிடிவி தினகரன், “தங்க தமிழ்ச்செல்வனை விமர்சித்ததோடு அவரை கொள்கை பரப்பு செயலாளர் பொறுப்பில் இருந்து அதிரடியாக நீக்கினார். இதைத்தொடர்ந்து, கொள்கை இல்லாத கட்சிக்கு உழைத்தது வீணாகிவிட்டதாகவும், அ.ம.மு.க. கட்சியில் ஒரு சதவீத தொண்டர்கள் கூட கட்சிக்கு இல்லை என்றும், பாதி நிர்வாகிகளும் கிளம்பிவிட்டதாகக் கூறினார்.
இந்த நிலையில், தான் எந்த கட்சியிலும் இணையவில்லை எனக் கூறியிருந்த தங்கதமிழ்செல்வன் நாளை தி.மு.க.வில் இணைய உள்ளார். ஏற்கனவே, தினகரன் அணியில் இருந்த முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தி.மு.க.வில் இணைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், அ.ம.மு.க.வின் செய்தி தொடர்பாளரும், தொழில்நுட்பப் பிரிவு தலைவருமான சசிரேகா, மீண்டும் அ.தி.மு.க.வில் இணைந்தார்.