கோவை : கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும் மே 1-ம் தேதி நடைபெற இருந்த கிராம சபைக் கூட்டம் 28-ம் தேதியன்று நடக்கிறது

கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் மே 1-ம் தேதி தொழிலாளர் தினத்தில் நடைபெற வேண்டிய கிராம சபைக் கூட்டம் நாடாளுமன்ற தேர்தல் நடத்தை விதி அமலில் இருந்த காரணத்தினால் - ஒத்திவைக்கப்பட்டது. அதற்கு பதிலாக ஜுன் 28-ம் தேதி காலை 11.00 மணிக்கு
கிராம சபைக் கூட்டம் அனைத்து ஊராட்சிகளிலும் நடைபெற உள்ளது.
இக்கூட்டத்தில் குடிநீர் விநியோகம், சுகாதாரம் திடக்கழிவு மேலாண்மை, பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தப்படுவதைத் தவிர்த்தல், 2019-20-க்கான கிராம வளர்ச்சித் திட்டம் தயாரித்தல், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், மகளிர் திட்டம், ஊராட்சிக் கணக்குகள் மற்றும் செலவினங்கள், ஊராட்சிகளில் நடைபெறும் பல்வேறு திட்டப்பணிகள் குறித்து விவாதிக்கப்படும். எனவே கிராம ஊராட்சி பகுதிகளில் உள்ள பொது மக்கள் தங்கள் ஊராட்சியில் நடைபெறும் கிராம சபைக் கூட்டத்தில் தவறாமல் கலந்து கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.