நீலகிரி : கோத்தகிரியில் கேரட் கழுவும் இயந்திர கட்டிடத்தை விரைவில் திறக்க வேண்டும் என்ற மாவட்ட நிர்வாகத்திற்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கோத்தகிரியில் இருந்து கோடநாடு செல்லும் சாலையில் சுள்ளிக்கூடு என்ற கிராமம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் ஆயிரம் ஏக்கருக்கு மேல் கேரட், பீட்ரூட் மற்றும் கிழங்கு உள்ளிட்ட மலை காய்கறிகள் விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. இதனால், இந்தப் பகுதியில் விவசாயிகள் பயன்பெறும் வகையில், மலை காய்கறிகளை கழுவுவதற்கான இயந்திரம் இந்த கிராமத்தில் பொருத்தப்பட்டது. தற்போது, பணி நிறைவடைந்து பல மாதங்களாகியும், விவசாயிகளின் பயன்பாட்டிற்கு இன்னும் இயந்திரம் வர முடியாத நிலை உள்ளதால் சிறு, குறு விவசாயிகள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

மேலும், தற்போது காய்கறிகளை சுத்தம் செய்ய சுமார் 20 கிலோ மீட்டர் தொலைவு சென்று வர வேண்டி உள்ளதாக விவசாயிகள் கூறியுள்ளனர். ஆகவே, மாவட்ட நிர்வாகம் விவசாயிகளின் நலன் கருதி, கேரட் கழுவும் இயந்திரம் கட்டிடத்தை விரைவில் செயல்படுத்த வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.