நீலகிரி : குன்னூர் அருகே உள்ள வண்டிசோலை பகுதியில் தாய் கரடி ஒன்று தனது இரண்டு குட்டிகளை தோலில் சுமந்து சென்ற அரிய காட்சியை அப்பகுதி மக்கள் அதிர்ச்சி கலந்த வியப்புடன் கண்டு ரசித்தனர்.
நீலகிரி : குன்னூர் அருகே உள்ள வண்டிசோலை பகுதியில் தாய் கரடி ஒன்று தனது இரண்டு குட்டிகளை தோலில் சுமந்து சென்ற அரிய காட்சியை அப்பகுதி மக்கள் அதிர்ச்சி கலந்த வியப்புடன் கண்டு ரசித்தனர்.

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி பகுதிகளில் கரடி.நடமாட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு மூடிக்கிடந்த பேக்கரியின் கதவை கரடி உடைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில், இன்று குன்னூர் வண்டிசோலையில் இருந்து அரவேணு செல்லும் சாலையில் கரடி ஒன்று இரண்டு குட்டிகளை தோளில் சுமந்து சென்ற அரிய காட்சியைக் கண்டு பலர் அதிர்ச்சியும், ஆனந்தமும் அடைந்தனர்.

இதனிடையே, ஒரே சமயத்தில் 2 குட்டிகளை தோளில் சுமர்ந்து கரடி தேயிலைத் தோட்டத்தில் இருந்து சாலையில் நடந்தது அரிய நிகழ்வாகும் என வன ஆர்வலர்கள் கூறினர்.