கோவை : தொண்டாமுத்தூர் அருகே உள்ள பார்வைதிறன் குறைபாடுடையோருக்கான மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான சிறப்புப்பள்ளியில் மாணவர் சேர்க்கை தொடங்கியுள்ளது.

தமிழ்நாடு அரசு மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலம் கோயம்புத்தூர் மாவட்டம் தொண்டாமுத்தூர் உலியம்பாளையத்தில் பார்வைதிறன் குறைபாடுடையோருக்கான மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான சிறப்புப்பள்ளி 1 ம் வகுப்பு முதல் 5 ம் வகுப்பு வரை செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் உணவு, உடை, உறைவிடம் அனைத்தும் இலவசமாக வழங்கப்படுகிறது. பயிற்சி பெற்ற சிறப்பு ஆசிரியர்களைக் கொண்டு பிரெய்லி முறையில் கல்வி உடன் இசை, கணினி, யோகா, விளையாட்டு ஆகிய அனைத்தும் கற்பிக்கப்பட்டு வருகிறது என்பதால், கோவை மற்றும் அருகாமையில் உள்ள மாவட்டங்களைச் சேர்ந்த பார்வைத்திறன் குறைபாடுடைய குழந்தைகளை அரசு பார்வையற்றோர் பள்ளியில் சேர்த்திடுமாறு கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.