பார்வைதிறன் குறைபாடுள்ள குழந்தைகளுக்கான சிறப்பு பள்ளியில் மாணவர் சேர்க்கை தொடக்கம்

கோவை : தொண்டாமுத்தூர்‌ அருகே உள்ள பார்வைதிறன்‌ குறைபாடுடையோருக்கான மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான சிறப்புப்பள்ளியில் மாணவர் சேர்க்கை தொடங்கியுள்ளது.

கோவை : தொண்டாமுத்தூர்‌ அருகே உள்ள பார்வைதிறன்‌ குறைபாடுடையோருக்கான மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான சிறப்புப்பள்ளியில் மாணவர் சேர்க்கை தொடங்கியுள்ளது.

தமிழ்நாடு அரசு மாற்றுத்திறனாளிகள்‌ நலத்துறையின்‌ மூலம்‌ கோயம்புத்தூர்‌ மாவட்டம்‌ தொண்டாமுத்தூர்‌ உலியம்பாளையத்தில்‌ பார்வைதிறன்‌ குறைபாடுடையோருக்கான மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான சிறப்புப்பள்ளி 1 ம்‌ வகுப்பு முதல்‌ 5 ம்‌ வகுப்பு வரை செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில்‌ உணவு, உடை, உறைவிடம்‌ அனைத்தும்‌ இலவசமாக வழங்கப்படுகிறது. பயிற்சி பெற்ற சிறப்பு ஆசிரியர்களைக்‌ கொண்டு பிரெய்லி முறையில்‌ கல்வி உடன்‌ இசை, கணினி, யோகா, விளையாட்டு ஆகிய அனைத்தும்‌ கற்பிக்கப்பட்டு வருகிறது என்பதால்,‌ கோவை மற்றும்‌ அருகாமையில்‌ உள்ள மாவட்டங்களைச்‌ சேர்ந்த பார்வைத்திறன்‌ குறைபாடுடைய குழந்தைகளை அரசு பார்வையற்றோர்‌ பள்ளியில்‌ சேர்த்திடுமாறு கோயம்புத்தூர்‌ மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார். 

Newsletter

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...