நீலகிரி : சிமி' தடை நீட்டிப்பு குறித்து தீர்ப்பாயத்தின் மூன்றாம் நாள் விசாரணையில் எந்த மனுக்களும், விசாரணைக்கு நபர்களும் ஆஜராகாததால் குன்னூரில் இன்று நடைபெற்ற கூட்டம் ஒரு மணிநேரத்தில் முடிக்கப்பட்டது.

'சிமி' எனப்படும் இந்திய இஸ்லாமிய மாணவர் அமைப்பு 1977-ல் துவங்கப்பட்டது. இந்த அமைப்பு பல்வேறு நாசகர செயல்களில் ஈடுபட்டதையடுத்து, 2001-ல் மத்திய அரசால் தடை செய்யப்பட்டது. அப்போது முதலே, இந்த அமைப்பு மீதான தடை அவ்வப்போது நீட்டிக்கப்பட்டு வருகிறது. கடைசியாக, 2014ல் ஐந்தாண்டு தடை நீட்டிப்பு வழங்கப்பட்டது. இந்த தடை உத்தரவு கடந்த ஜனவரி 31-ம் தேதியுடன் முடிவுக்கு வந்தது. இதையடுத்து, 'சிமி' அமைப்பின் மீதான தடை நீட்டிக்கப்படுமா என்பது குறித்து டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி முக்தா குப்தா தலைமையிலான தீர்ப்பாயம் சனிக்கிழமை முதல் இன்று வரை 3 நாட்கள் குன்னூரில் விசாரணை மேற்கொண்டது.

இதில், குஜராத், ஜார்கண்ட், தமிழகம், கேரளா, கர்நாடகா மற்றும் ஆந்திராவைச் சேர்ந்த குற்றப்பிரிவு, பயங்கரவாத தடுப்பு பிரிவு, மாநில உளவுத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். இன்று நடைபெற்ற விசாரணையில் மனுக்கள் கொடுக்க யாரும் முன் வராததால் ஒரு மணி நேரத்தில் தீர்ப்பாய நீதிபதி மற்றும் அதிகாரிகள் அவையில் இருந்து சென்றனர். 'சிமி' அமைப்பினர் மீது ஏற்கனவே பல வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும், அவர்கள் மீதான தடை விலக்கப்பட்டால், பல தேச விரோத செயல்களில் அவர்கள் ஈடுபடும் அபாயம் உள்ளதாகவும் கூறி தீர்ப்பாயம் முன் கடந்த இரண்டு நாட்களில் 9 மனுக்கள் பெறப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.