கோவை : கோவை முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் உள்ள காலி பணியிடங்களுக்கான முதற்கட்ட நேர்காணல் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கோவை முதன்மை மாவட்ட நீதிமன்றத்தால் 5 அலுவலக உதவியாளர் மற்றும் 16 இரவுக் காவலர்/ மசால்சி மற்றும் இரவு காவலர்/ மசால்சி காலிப் பணியிடங்களுக்கு கடந்த 2017-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் விண்ணப்பங்கள் கோரப்பட்டன. வரப்பெற்ற விண்ணப்பங்களில் பரிசீலனைக்குப் பிறகு 3,543 விண்ணப்பங்கள் முதற்கட்ட நேர்காணலுக்கு உரியனவாக கண்டறியப்பட்டு, அதன் விவரங்கள் districts.ecourts.gov.in/coimbatore என்ற வலைத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
முதற்கட்ட நேர்காணல் வரும் 29-ம் தேதி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நடைபெறும், இரண்டாம் கட்டத்திற்கு தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு 30-ம் தேதி 2-ம் கட்ட நேர்காணல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், 29 மற்றும் 30 தேதிகளில் நடக்கவிருந்த காலிப் பணியிடங்களுக்கான நேர்காணல் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், விபரங்களுக்கு districts.ecourts.gov.in/coimbatore என்ற வலைத்தளத்தை தொடர்பு கொள்ளலாம்.