திருப்பூர் : திருப்பூரில் தனியார் பங்களிப்புடன் கட்டப்பட்ட மாநகராட்சி நடுநிலைப் பள்ளிக்கு தனியார் பெயர் வைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

திருப்பூர் ராயபுரம் பகுதியில் செயல்பட்டு வந்த மாநகராட்சி நடுநிலைப் பள்ளி திருப்பூர் பிரைம் ரோட்டரி சங்கம் சார்பில் ரூ. 75 லட்சம் நிதி உதவியுடன் புனரமைக்கப்பட்டது. கட்டுமானப் பணிகள் நிறைவடைந்த நிலையில், பள்ளி திறப்பு விழா கடந்த வாரம் நடைபெற்றது. அப்போது, துரோணா பாடசாலை மாநகராட்சி நடுநிலைப்பள்ளி என பெயர் வைக்கப்பட்டிருந்தது. தனியார் பங்களிப்புடன் புனரமைக்கப்பட்ட பள்ளியாக இருந்தாலும், மாநகராட்சி பள்ளிக்கு தனியார் பெயர் சூட்டப்பட்டிருப்பது ராயபுரம் பகுதி மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. எனவே, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.