விவசாய பாசனத்திற்கு உடனடியாக தண்ணீர் திறக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி விவசாய சங்கத்தினர் மனு

கோவை : ஆனைமலை வட்டம் ஓடையகுளம் பகுதியில் விவசாய பாசனதிற்காக தண்ணீர் திறந்துவிடக் கோரி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாய சங்கத்தினர் கோவை ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

கோவை : ஆனைமலை வட்டம் ஓடையகுளம் பகுதியில் விவசாய பாசனதிற்காக தண்ணீர் திறந்துவிடக் கோரி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாய சங்கத்தினர் கோவை ஆட்சியரிடம் மனு அளித்தனர். 

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாய சங்கத்தினர் மாவட்ட ஆட்சித்தலைவரிடம் மனு ஒன்று அளித்தனர். அதில், ஆனைமலை வட்டம் ஓடையகுளம் பகுதியில் விவசாயப் பாசனத்திற்கு உடனடியாக தண்ணீர் திறந்து விட வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். 

பின்னர் செய்தியாளர்களிடம் அச்சங்கத்தின் கோவை மாவட்ட தலைவர் பட்டீஸ்வரன் கூறுகையில், "ஓடையகுளம் பகுதியில் 1,000 ஏக்கர் நிலம் உள்ளது. இங்கு தென்னை, வாழை, கரும்பு என விவசாயிகள் பயிரிட்டு வருகின்றன. வழக்கமாக விவசாயத்திற்கு மே 15 முதல் ஏப்ரல் 15 வரை பதினொரு மாதங்களுக்கு ஒரு போக விவசாயம் செய்ய ஒரு டி.எம்.சி. தண்ணீர் திறந்து விட வேண்டும். வருடத்திற்கு இரண்டு போக விவசாயம் செய்து வரும் நிலையில், கடந்த ஆறு மாதங்களாக தண்ணீர் திறக்கப்படவில்லை. தண்ணீர் திறக்காத காரணத்தால் ஒரு போக விவசாயம் செய்யவில்லை. ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதனை நம்பி கூலி வேலை செய்யும் 10,000 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். மாவட்ட ஆட்சியர் விவசாய பாசனத்திற்குத் தண்ணீர் திறந்து விட உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்," என வலியுறுத்தினர்.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...