சென்னையின் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க மாற்று ஏற்பாடுகள் தீவிரம் : உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தகவல்

கோவை : சென்னையின் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்


கோவை : சென்னையின் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்

கோவை குனியமுத்தூர் பகுதியில் உள்ள புனித மார்க்ஸ் தேவாலயத்தில் மழை வேண்டி நடந்த சிறப்பு பிரார்த்தனையில் உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பங்கேற்றார். 



இதையடுத்து, அதே பகுதியில் உள்ள ஹஜ்ரத் நூர்ஷா அவுலியா தர்காவில், மழை வேண்டி நடந்த சிறப்பு தொழுகையிலும் எஸ்.பி.வேலுமணி பங்கேற்றார். 



இதன்பின்னர் செய்தியாளர்களுக்கு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேட்டியளித்ததாவது :- தமிழக மக்களுக்கு தேவையான திட்டங்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஒ.பன்னீர்செல்வம் தந்து வருகிறார்கள். கடுமையான வறட்சி காரணமாக சென்னை உள்ளிட்ட பகுதிகளில் நிலத்தடி நீர் குறைந்துள்ளது. இதனால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. குடிநீர் தட்டுப்பாட்டை போக்க மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. மழை வர மரங்கள் முக்கியம். மாணவர்கள், பொதுமக்கள் மரங்கள் வளர்க்க ஆர்வம் காட்ட வேண்டும். மேலும், உள்ளாட்சி துறை மூலமாக மரக்கன்றுகள் வழங்கப்பட்டு வருகிறது. மழைநீர் சேகரிப்பு, மரம் வளர்ப்பிற்கு தமிழக அரசு முக்கியத்துவம் அளிக்கும், என அவர் தெரிவித்தார்.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...