பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைதான 5 பேரும் சேலம் மத்திய சிறைக்கு திடீர் மாற்றம்

கோவை : பொள்ளாச்சியில் இளம்பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 5 பேரும் கோவையில் இருந்து சேலம் மத்திய சிறைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

கோவை : பொள்ளாச்சியில் இளம்பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 5 பேரும் கோவையில் இருந்து சேலம் மத்திய சிறைக்கு மாற்றப்பட்டுள்ளனர். 

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவமானது நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த வழக்கை கோவை மாவட்ட போலீசார் விசாரணை செய்து வந்த நிலையில், சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டது. பின்னர், சி.பி.சி.ஐ.டி. போலீசாரிடம் இருந்து இந்த வழக்கு சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக, கடந்த சில நாட்களாக சி.பி.ஐ. போலீசார், பாதிக்கப்பட்ட பெண்கள், குற்றம் சுமத்தப்பட்டவர்களின் உறவினர்களிடம் விசாரணை நடத்தினர். அதேபோல, பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள திருநாவுக்கரசு, சபரி ராஜன், சதீஷ், வசந்தகுமார், மணிவண்ணன் ஆகியோரின் வீடுகளில் ரகசியமாக சென்று விசாரணை மேற்கொண்டுள்ளனர். மேலும், இந்த வழக்கில் விரைவாக விசாரணை மேற்கொண்டு வரும் சி.பி.ஐ. போலீசார் குற்றப்பத்திரிகையையும் தாக்கல் செய்துள்ளனர். 

இந்த நிலையில், இந்த வழக்கில் கைதான திருநாவுக்கரசு, சபரிராஜன், வசந்தகுமார், சதீஷ் மற்றும் மணிவண்ணன் ஆகிய 5 பேரும் சேலம் சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டனர். நிர்வாகம் மற்றும் பாதுகாப்பு காரணத்திற்காக மாற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...