குன்னூரில் சிமி அமைப்பு குறித்து நாளை முதல் 3 நாட்கள் கருத்து தெரிவிக்கலாம்

நீலகிரி :தடை செய்யப்பட்ட சிமி அமைப்பு குறித்து குன்னூரில் நாளை முதல் 3 நாட்களுக்கு கருத்து தெரிவிக்கலாம் என நீலகிரி ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தெரிவித்துள்ளார்.

நீலகிரி :தடை செய்யப்பட்ட சிமி அமைப்பு குறித்து குன்னூரில் நாளை முதல் 3 நாட்களுக்கு கருத்து தெரிவிக்கலாம் என நீலகிரி ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தெரிவித்துள்ளார்.

இந்திய இஸ்லாமிய மாணவர்களின் இயக்கம் (சிமி) கடந்த 1977ஆம் ஆண்டு உத்தரப்பிரதேசத்தில் தொடங்கப்பட்டது. இந்த இயக்கத்தை மத்திய அரசு தீவிரவாத இயக்கம் என்று அறிவித்து, 2002ஆம் ஆண்டு தடை செய்தது. இந்த நிலையில், சிமி இயக்கம் மீதான தடையை நீக்குவது அல்லது நீடிப்பது குறித்து டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி முக்தா குப்தா தலைமையில் அமைக்கப்பட்ட சட்டவிரோத செயல்கள் தடுப்பு தீர்ப்பாயத்தின் அமர்வு நாளை முதல் 24ம் தேதி வரை 3 நாட்கள் குன்னூர் நகராட்சி அலுவலக கூட்ட அரங்கில் விசாரணை நடத்த உள்ளது. 

இந்த நிலையில், இதுதொடர்பாக சாட்சியம் அளிக்க விரும்பும் நபர்கள் மேற்கண்ட நாட்களில் தீர்ப்பாயத்தின் முன்பு ஆஜராகி சாட்சியம் அளிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தெரிவித்துள்ளார். சிமி இயக்கம் மீதான தடை குறித்து விசாரணை கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு குன்னூரில் நடந்தது குறிப்பிடத்தக்கது. நாளை நடைபெறும் விசாரணையில் டெல்லியில் இருந்து மத்திய அரசு வழக்கறிஞர்களும், இந்து முன்னணி சார்பில் கோவை மற்றும் குன்னூரில் இருந்து வழக்கறிஞர்களும் ஆஜராகவுள்ளனர்.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...