நீலகிரி : குன்னூர் அருகே கிராமத்திற்கு செல்லும் சாலையில் உலா வந்த கரடியை வனப்பகுதிக்குள் விரட்ட கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நீலகிரி மாவட்டம் குன்னூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கரடிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. தற்போது, குன்னூர் பகுதிகளில் காட்டெருமைகளின் எண்ணிக்கை அதிகரித்து சர்வ சாதாரணமாக குடியிருப்பு பகுதிகளுக்குள் உலா வருவதைப் போல, சமீபகாலமாக கரடிகள் குடியிருப்பு பகுதிகளை நோக்கி படைபெயடுக்கத் துவங்கியுள்ளன. பகல் நேரங்களில் தேயிலை தோட்டங்களிலும், இரவு நேரங்களில் குடியிருப்பு பகுதிகளில் கரடிகள் உலா வருவதால், பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

இந்த நிலையில், குன்னூர் அருகேயுள்ள கீழ்ஒடயரட்டி கிராமத்திற்கு செல்லும் சாலையில் கரடி ஒன்று சர்வசாதாரணமாக சென்று கொண்டிருந்தது. கரடியை கண்டவர்கள் தலைதெறிக்க ஓட்டம் பிடித்தனர். கரடி சாலையில் சிறிது தூரம் நடந்து விட்டு தேயிலை தோட்டத்திற்குள் புகுந்து விட்டது. இதனால், அவ்வழியாக வந்துக்கொண்டிருந்த பொதுமக்கள் நிம்மதி அடைந்தனர். மேலும், எந்த நேரத்திலும் ஆபத்து இருப்பதால், கரடியை இந்த பகுதியிலிருந்து வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.