குன்னூர் அருகே உலா வரும் கரடியை வனப்பகுதிக்குள் விரட்ட கோரிக்கை

நீலகிரி : குன்னூர் அருகே கிராமத்திற்கு செல்லும் சாலையில் உலா வந்த கரடியை வனப்பகுதிக்குள் விரட்ட கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நீலகிரி : குன்னூர் அருகே கிராமத்திற்கு செல்லும் சாலையில் உலா வந்த கரடியை வனப்பகுதிக்குள் விரட்ட கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நீலகிரி மாவட்டம் குன்னூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கரடிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. தற்போது, குன்னூர் பகுதிகளில் காட்டெருமைகளின் எண்ணிக்கை அதிகரித்து சர்வ சாதாரணமாக குடியிருப்பு பகுதிகளுக்குள் உலா வருவதைப் போல, சமீபகாலமாக கரடிகள் குடியிருப்பு பகுதிகளை நோக்கி படைபெயடுக்கத் துவங்கியுள்ளன. பகல் நேரங்களில் தேயிலை தோட்டங்களிலும், இரவு நேரங்களில் குடியிருப்பு பகுதிகளில் கரடிகள் உலா வருவதால், பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.



இந்த நிலையில், குன்னூர் அருகேயுள்ள கீழ்ஒடயரட்டி கிராமத்திற்கு செல்லும் சாலையில் கரடி ஒன்று சர்வசாதாரணமாக சென்று கொண்டிருந்தது. கரடியை கண்டவர்கள் தலைதெறிக்க ஓட்டம் பிடித்தனர். கரடி சாலையில் சிறிது ‌தூரம் நடந்து விட்டு தேயிலை தோட்டத்திற்குள் புகுந்து விட்டது. இதனால், அவ்வழியாக வந்துக்கொண்டிருந்த பொதுமக்கள் நிம்மதி அடைந்தனர். மேலும், எந்த நேரத்திலும் ஆபத்து இருப்பதால், கரடியை இந்த பகுதியிலிருந்து வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...