திருப்பூர் : சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு திருப்பூரில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்ற யோகா நிகழ்ச்சி நடைபெற்றது.

வருடம் தோறும் ஜூன் 21-ம் தேதி சர்வதேச யோகா தினம் நாடு முழுவதும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு, உலக சமுதாய சேவா சங்கம் சார்பில் திருப்பூர் ஜெய்வாபாய் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் யோகா நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இந்த யோகா நிகழ்ச்சியில், திருப்பூரின் பல்வேறு மனவளக்கலை அறக்கட்டளையைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு யோகா பயிற்சி செய்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய உலக சமுதாய சேவா சங்கத்தின் துணைத் தலைவர் நாகராஜ், “யோகாவின் மூலம் மன அமைதி ஏற்படுவதோடு, உடல் நலமும் ஆரோக்கியப்படுவதால் மாணவர்கள் உட்பட அனைவருமே யோகா பயிற்சி மேற்கொள்ள வேண்டும்,” என கேட்டுக்கொண்டார்.