கோவை : மேட்டுப்பாளையத்தில் உலக யோகா தினத்தை முன்னிட்டு ஆயிரம் பள்ளி மாணவ, மாணவிகள் ஒரே இடத்தில் ஒருங்கிணைந்து யோகாசனம் செய்து அசத்தினர்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள கல்லாரில் செயல்படும் சச்சிதானந்தா ஜோதி நிகேதன் பன்னாட்டு பள்ளியில் இன்று உலக யோக தினத்தை முன்னிட்டு நடத்தபட்ட இந்த நிகழ்ச்சியில் பள்ளி மாணவ, மாணவிகள் சுமார் ஆயிரம் பேர் ஒரே இடத்தில் கூடி யோகாசனம் செய்து அசத்தினர். சிந்தனை கவிஞர் டாக்டர் கவிதாசன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் மாணவர்கள் மட்டுமின்றி ஆசிரியர்கள் என அனைவரும் அதிகாலை பள்ளி மைதானத்தில் கூடி இயற்கையான சூழல் மிகுந்த கல்லாரில் சூரிய நமஸ்காரத்தில் துவங்கி பத்மாசனம், புஜங்காசனம், சலபாசனம், தனுராசனம், சர்வாங்க ஆசனம், மச்சானம், யோகமுத்ரா என பல்வேறு ஆசனங்களின் மூலம் தங்களது உடலை வளைத்து செய்து காண்பித்தது அனைவரையும் ஆச்சரியப்படும் அளவுக்கு இருந்தது.

குறிப்பாக, சிறுவர்கள் ஒவ்வொருவரும் குறிப்பிட்ட இடைவெளி விட்டு தனித்தனியாக அணிவகுத்து யோகாசனம் செய்தனர். மாணவர்களின் மன வலிமையும் உடல் ஆரோக்கியத்தையும் பெற தினந்தோறும் யோகாசனம் செய்வதால், நமது உடல் மட்டுமின்றி மனதும் புத்துணர்வு அடையும். அத்துடன் ஆரோக்கியமான வாழ்க்கை வாழ அனைவரும் யோகா செய்ய இந்நிகழ்ச்சியில் உறுதி மொழி எடுத்துக்கொள்ளப்பட்டது.