நீலகிரி : குன்னூர் ராணுவ மையத்தில் பணிபுரிந்து டிசம்பர் மாதத்தில் ஓய்வுபெற உள்ள ராணுவ வீரர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு தீ விபத்து மற்றும் பேரிடர் கால மீட்பு பயிற்சி நடைபெற்றது.

பொதுவாக, ராணுவத்தில் பணிபுரிபவர்கள் தங்களது ஓய்வுக்குப் பிறகு பல்வேறு அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் தீயணைப்பு நிலையத்தில் பயிற்சி பெற்று சான்றிதழ் பெற்றால், அது அவர்களின் எதிர்காலத்திற்கு பயனுள்ளதாக இருக்கும் என்று கருதி மத்திய அரசின் சார்பில் தீயணைப்பு பயிற்சி முகாமிற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதில், ஓய்வுபெற இருக்கும் ராணுவ வீரர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு அமிலம் மற்றும் பெட்ரோலிய பொருட்களால் ஏற்படும் தீயை அணைப்பது, பேரிடர் காலங்களில் தவித்துக் கொண்டு இருப்பவர்களை எவ்வாறு காப்பாற்றுவது மற்றும் சாலைகளின் குறுக்கே மரம் விழுந்தால் அதனை எவ்வாறு அகற்றுவது, கான்கிரீட் வீடுகளின் இடர்பாடுகளுக்கு இடையே மாட்டிக் கொண்டு இருப்பவர்களை எவ்வாறு மீட்டு, அவர்களை வெளியே கொண்டு வருவது உள்ளிட்ட பயிற்சிகள் அளிக்கப்பட்டன.

இந்தப் பயிற்சியில் குன்னூர் தீயணைப்பு நிலைய அதிகாரி மோகன் தலைமையில் தீயணைப்பு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டு, ராணுவ வீரர்களுக்கு பயிற்சி அளித்தனர்.