கோவையில் மேலும் ஒருவரின் இல்லத்தில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை : முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகத் தகவல்

கோவை : கோவையில் பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்புடையதாக இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மேலும் ஒருவரின் இல்லத்தில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை நடத்தியுள்ளனர்.


கோவை : கோவையில் பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்புடையதாக இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மேலும் ஒருவரின் இல்லத்தில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை நடத்தியுள்ளனர். 



குனியமுத்தூர் சாந்தி நகர் பகுதியில் வசித்து வருபவர் சினோஜ் (35). இவரது வீட்டில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் அசாருதீனிடம் விசாரணை மேற்கொண்டதின் அடிப்படையில், இன்று சுமார் ஒரு மணி நேரம் தீவிர சோதனை நடத்தினர். அதேபோல, அசாருதீனை அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையின்போது, மாநகர காவல் துறையினரும், தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகளுடன் இருந்தனர். மேலும், அதிகாரிகள் நடத்திய சோதனையில் இரண்டு ஹார்ட் டிஸ்க்குகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து, அதிகாரிகள் அசாருதீனை மீண்டும் அழைத்துச் சென்று விட்டனர். திடீரென குடியிருப்புக்குள் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனைக்காக நுழைந்தது குனியமுத்தூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...