திருப்பூரில் அடுத்தடுத்த வீடுகளின் கதவை உடைத்து 36 சவரன் நகை கொள்ளை

திருப்பூர் : திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் ஒரே பகுதியில் இரு வீட்டின் கதவுகளை உடைத்து 36 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக பல்லடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருப்பூர் : திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் ஒரே பகுதியில் இரு வீட்டின் கதவுகளை உடைத்து 36 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக பல்லடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

திருப்பூர் மாவட்டம் பல்லடம் வட்டாட்சியர் அலுவலகம் எதிரே உள்ள மகாலட்சுமி அவென்யூ பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஷ் கண்ணா. எல்.ஐ.சி. முகவரான இவருக்கு கவிதா என்ற மனைவியும், கார்த்தி என்ற மகனும் உள்ளனர். கடந்த சில நாட்களாக ராஜேஷ் கண்ணாவிற்கு உடல்நிலை சரியில்லாததால் பல்லடம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில், இன்று அவரது மகன் கல்லூரிக்குச் சென்றிருந்த பொழுது, அருகிலிருந்தவர்கள் வீட்டின் கதவு திறந்திருப்பதைப் பார்த்து மருத்துவமனையில் இருந்த கவிதாவுக்கு தகவல் அளித்தனர்.



அதனைத் தொடர்ந்து, வீட்டிற்கு வந்த அவர் வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருப்பதையும், பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த 30 சவரன் நகை மற்றும் ரூ. 5,000 பணம் கொள்ளை அடிக்கப்பட்டிருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். பின்னர், உடனடியாக பல்லடம் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தார். அதன்பேரில், சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டது.

இதேபோல, இன்று துரைசாமி நகர் பகுதியில் வீட்டின் பூட்டை உடைத்து 6 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டது. பட்டப்பகலில் பல்லடம் பகுதியில் நடைபெற்ற இச்சம்பவங்களால் பொது மக்கள் பீதியடைந்துள்ளனர்.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...