கூடலூர் அருகே காட்டு யானை தாக்கியதில் முதியவர் படுகாயம் : ஆத்திரத்தில் பொதுமக்கள் சாலை மறியல்

நீலகிரி : கூடலூர் அருகே காட்டு யானை தாக்கி முதியவர் காயமடைந்த நிலையில், வனவிலங்குகள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த வனத்துறையினர் தவறிவிட்டதாகக் கூறி கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

நீலகிரி : கூடலூர் அருகே காட்டு யானை தாக்கி முதியவர் காயமடைந்த நிலையில், வனவிலங்குகள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த வனத்துறையினர் தவறிவிட்டதாகக் கூறி கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். 

நீலகிரி மாவட்டம் பந்தலூர் தாலுகா பாட்டவயல் பகுதியில் இன்று காலை 5 மணியளவில் மொய்தீன் என்பவரை காட்டு யானை தாக்கியுள்ளது. காலை நேரத்தில் பள்ளிக்கு தொழுகைக்காக சென்ற இவரை காட்டு யானை தாக்கியது. அப்போது, அருகில் இருந்தவர்கள் சத்தம் எழுப்பி யானையை விரட்டி விட்டு, மொய்தீனை மீட்டுள்ளனர். வயிற்றில் பலத்த காயமடைந்த அவர் அருகில் உள்ள கேரள மாநிலம் தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார். 



கடந்த இரண்டு மாதங்களில் இதே பகுதியில் மூன்று பேர் காட்டு யானையால் தாக்கப்பட்டதில், ஒருவர் உயிரிழந்துள்ளார். காட்டு யானைகளின் நடமாட்டத்தை கட்டுப்படுத்த வனத்துறை தவறியதாகக் கூறி கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதன் காரணமாக, கேரளா - தமிழகம் இடையேயான போக்குவரத்து சுமார் 3 மணி நேரத்திற்கு மேல் பாதிக்கப்பட்டது. பேருந்துகள் மற்றும் ஜீப்புகள் கார்களில் வந்த பயணிகள் வாகனங்களை இயக்க முடியாமல் காத்துக் கிடந்தனர்.

 

போராட்டத்தின் போது, ஊருக்குள் யானைகள் வருவதை கட்டுப்படுத்த வேண்டும், அகழிகளை முறையாக பராமரித்து ஆழப்படுத்தி பாதுகாக்க வேண்டும், உரிய இடங்களில் மின்வேலி அமைக்க வேண்டும், ஊருக்குள் புகுந்து பொதுமக்களை தாக்கும் காட்டு யானையை வனப்பகுதிக்குள் நிரந்தரமாக விரட்ட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தனர். இதனையடுத்து, சம்பவ இடத்துக்கு வந்த கூடலூர் சட்டமன்ற உறுப்பினர் திராவிட மணி, கூடலூர் கோட்ட வன அலுவலர் சோமன் சுரேஷ் உள்ளிட்டோர் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறிதையடுத்து, சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...