குடிநீர் வழங்காத ஊராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து காலி குடங்களுடன் தேக்கம்பட்டி கிராம மக்கள் சாலைமறியல்

கோவை : மேட்டுப்பாளையம் அருகே உள்ள தேக்கம்பட்டி கிராமத்தில் கடந்த ஒரு வாரமாக குடிநீர் வழங்காத ஊராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து, அப்பகுதி மக்கள் மேட்டுப்பாளையம் - தேக்கம்பட்டி சாலையில் காலி குடங்களுடன் சாலை மறியல் போராட்டம் நடத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை : மேட்டுப்பாளையம் அருகே உள்ள தேக்கம்பட்டி கிராமத்தில் கடந்த ஒரு வாரமாக குடிநீர் வழங்காத ஊராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து, அப்பகுதி மக்கள் மேட்டுப்பாளையம் - தேக்கம்பட்டி சாலையில் காலி குடங்களுடன் சாலை மறியல் போராட்டம் நடத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

சீரான குடிநீர் வழங்க வலியுறுத்தி மேட்டுப்பாளையம் - புஜங்கனூர் சாலையில் உள்ள தேக்கம்பட்டியில் காலிக்குடங்களுடன் பெண்கள் உட்பட 50-க்கும் மேற்பட்டோர் மறியல் போராட்டம் நடத்தினர். அப்போது, பவானி ஆறு அருகில் இருந்தும் அதிலிருந்து சீரான முறையில் தண்ணீர் எடுத்து விநியோகம் செய்யாமல் அதிகாரிகள் அலட்சியமாக நடந்துகொள்வதாகக் கூறும் கிராம மக்கள், தண்ணீர் குழாய்களில் உடைப்புகள் ஏற்பட்டால் உடனடியாக சீரமைக்காமல் காலம்தாழ்த்தி வருவதால், குழாய்கள் உடைந்து தண்ணீர் வீணாவதாக குற்றம்சாட்டினர். இது குறித்து பல முறை ஊராட்சி நிர்வாகத்திடம் புகார் அளித்தும், உரிய நடவடிக்கை எடுக்காமல் அலட்சியமாக பதில் கூறுவதாக அவர்கள் புகார் தெரிவித்தனர்.



இதனையடுத்து, நிகழ்விடத்திற்கு வந்த காரமடை போலீசார் மற்றும் காரமடை வட்டார வளர்ச்சி அலுவலர், மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, அவர்களை முற்றுகையிட்ட மக்கள் குடிக்கத் தண்ணீர் இன்றி கிராம மக்கள் அவதிப்படுவதாகப் புகார் அளித்தனர். பின்னர், ஊராட்சி செயலாளரை அழைத்து விசாரணை நடத்திய வட்டார வளர்ச்சி அலுவலர் தனலட்சுமி, பிரச்சனைக்கு உரிய பகுதிகளில் உள்ள குறைகளைக் கலைந்து சீரான குடிநீர் வழங்க உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள உத்தரவிட்டார். பின்னர், போராட்டம் கைவிடப்பட்டது. பொதுமக்கள் போராட்டம் காரணமாக அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...