கோவை : கல் குவாரி அமைவதை தடுத்து நிறுத்திட வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
கோவை : கல் குவாரி அமைவதை தடுத்து நிறுத்திட வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
மேட்டுபாளையம் வட்டம் காரமடை ஒன்றியம் முடுதுறை கிராமத்தில் 435 கல் குவாரிகள் அமைக்க அனுமதி கோரி விண்ணப்பங்கள் கொடுக்கப்பட்டு உள்ளதாகவும், அதற்கு அனுமதி அளிக்கக் கூடாது என கூறி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

இது குறித்து அவர்கள் கூறியதாவது :- இப்பகுதிகளில், ஏற்கனவே கல்குவாரிகள் இயங்கி வரும் காரணத்தால் விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டு உள்ள நிலையில், மேலும் கல்குவாரிகளுக்கு அனுமதி அளிக்கும் பட்சத்தில், விவசாயம் முற்றிலும் அழிந்து விடும் சூழல் ஏற்படும். மேலும், குடியிருப்பு பகுதிகளில் கல்குவாரிகள் இயங்குவதால் வீடுகளில் விரிசல் ஏற்படுகிறது. கால்நடைகள் கடுமையாக பாதிக்கப்படுகிறது. மேற்படி கிராமத்தில் குடியிருப்பு அதிகமாகி வரும் நிலையில், அங்கு வசிப்பவர்களுக்கு இடையூறு ஏற்படும் என்பதால் கல்குவாரிகள் அமைக்க அனுமதி வழங்கக் கூடாது, என வலியுறுத்தி மனு அளிக்கப்பட்டது.