கோவை : நாடாளுமன்ற தேர்தல் தோல்வியை கண்டு துவண்டு விடாமல், அடுத்து நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில் மகத்தான வெற்றி பெறுவதை மட்டும் குறிக்கோளாக கொண்டு செயல்பட வேண்டுமென கோவையில் நடைபெற்ற அ.தி.மு.க. நிர்வாகிகள் கூட்டத்தில் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தெரிவித்துள்ளார்.

கோவை புறநகர் மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் அக்கட்சியின் மாவட்ட தலைமை அலுவலகமான இதயதெய்வம் மாளிகையில் நடைபெற்றது. சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பொள்ளாச்சி மகேந்திரன் உள்ளிட்ட பலர் கூட்டத்தில் பங்கேற்றனர்.

இக்கூட்டத்தில் கோவை மாவட்ட செயலாளரும், தமிழக உள்ளாட்சி துறை அமைச்சருமான எஸ்.பி.வேலுமணி பேசியதாவது :- நடைபெற்று முடிந்த சட்டமன்ற இடைத்தேர்தல் மற்றும் நாடாளுமன்ற தேர்தல் ஆகியவற்றில் சிறப்பாக பணியாற்றிய நிர்வாகிகளுக்கு நன்றி. நாடாளுமன்ற தேர்தலில் பொய் பிரச்சாரங்களை மக்கள் நம்பி விட்டனர். இருப்பினும், சூலூர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெற்றதன் மூலம் கொங்கு அ.தி.மு.க. எஃகு கோட்டை என்பது நிரூபணமாகி விட்டது. நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில் சிறப்பான வெற்றி பெறுவதே நமது லட்சியம் என்ற அடிப்படையில் அனைவரும் கடுமையாக உழைக்க வேண்டும், என கேட்டுக்கொண்டார்.