உள்ளாட்சி தேர்தலில் மகத்தான வெற்றி பெறுவதை குறிக்கோளாக கொண்டு செயல்பட வேண்டும் : அ.தி.மு.க. நிர்வாகிகளுக்கு அமைச்சர் எஸ்.பி. வேலுமணி அறிவுறுத்தல்

கோவை : நாடாளுமன்ற தேர்தல் தோல்வியை கண்டு துவண்டு விடாமல், அடுத்து நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில் மகத்தான வெற்றி பெறுவதை மட்டும் குறிக்கோளாக கொண்டு செயல்பட வேண்டுமென கோவையில் நடைபெற்ற அ.தி.மு.க. நிர்வாகிகள் கூட்டத்தில் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தெரிவித்துள்ளார்.


கோவை : நாடாளுமன்ற தேர்தல் தோல்வியை கண்டு துவண்டு விடாமல், அடுத்து நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில் மகத்தான வெற்றி பெறுவதை மட்டும் குறிக்கோளாக கொண்டு செயல்பட வேண்டுமென கோவையில் நடைபெற்ற அ.தி.மு.க. நிர்வாகிகள் கூட்டத்தில் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தெரிவித்துள்ளார்.

கோவை புறநகர் மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் அக்கட்சியின் மாவட்ட தலைமை அலுவலகமான இதயதெய்வம் மாளிகையில் நடைபெற்றது. சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பொள்ளாச்சி மகேந்திரன் உள்ளிட்ட பலர் கூட்டத்தில் பங்கேற்றனர்.



இக்கூட்டத்தில்  கோவை மாவட்ட செயலாளரும், தமிழக உள்ளாட்சி துறை அமைச்சருமான எஸ்.பி.வேலுமணி பேசியதாவது :- நடைபெற்று முடிந்த சட்டமன்ற இடைத்தேர்தல் மற்றும் நாடாளுமன்ற தேர்தல் ஆகியவற்றில் சிறப்பாக பணியாற்றிய நிர்வாகிகளுக்கு நன்றி. நாடாளுமன்ற தேர்தலில் பொய் பிரச்சாரங்களை மக்கள் நம்பி விட்டனர். இருப்பினும், சூலூர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெற்றதன் மூலம் கொங்கு அ.தி.மு.க. எஃகு கோட்டை என்பது நிரூபணமாகி விட்டது. நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில் சிறப்பான வெற்றி பெறுவதே நமது லட்சியம் என்ற அடிப்படையில் அனைவரும் கடுமையாக உழைக்க வேண்டும், என கேட்டுக்கொண்டார்.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...