கோவையில் பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்திய நாய்களின் சாகச கண்காட்சி

கோவை : கோவையில் நடைபெற்ற அகில இந்திய அளவிலான நாய்கள் கண்காட்சியில், பல்வேறு நாடுகளை சேர்ந்த நாய்கள் செய்த சாகசங்கள் பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தியது..


கோவை : கோவையில் நடைபெற்ற அகில இந்திய அளவிலான நாய்கள் கண்காட்சியில், பல்வேறு நாடுகளை சேர்ந்த நாய்கள் செய்த சாகசங்கள் பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தியது.. 



ஆனைமலைஸ் கென்னல் கிளப் சார்பாக கோவையில் 11 மற்றும் 12 வது அகில இந்திய நாய்கள் கண்காட்சி கோவை ஹிந்துஸ்தான் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இதில், தமிழகம் மற்றும் நாட்டின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த மின்பின், பக், பீகிள், பூடுல், மேலினீயஸ், லாசா அப்சா, டால்மேஷன், கிரேட்டேன், ஜெர்மன் ஷெப்பர்டு உள்ளிட்ட பல்வேறு விதமான நாய்கள் மொத்தம் 44 வகை இனங்கள் கலந்து கொண்டன. இதில், சில நாய் இனங்கள் இங்கிலாந்து, அயர்லாந்து, ஆஸ்திரேலியா நாடுகளை பூர்வீகமாக கொண்ட நாய்களும் கலந்து கொண்டன. இந்தக் கண்காட்சியில் தமிழ்நாடு காவல் துறை மோப்ப நாய்களும், நாட்டு நாய் இனங்களான ராஜபாளையம், கோம்பை, சிப்பிப்பாறை, கண்ணி உள்ளிட்ட நாய்கள் செய்த சாகசங்கள் பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தியது. 



இந்த கண்காட்சியில் கலந்து கொள்ளும் நாய்களுக்கு மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டு பின்னர் சிறந்த சாகசங்கள் செய்யும் நாய்களுக்கு பரிசுகள் மற்றும் கோப்பைகள் வழங்கப்படும் என கண்காட்சி ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர். கண்காட்சியில், நாய்களுக்கான உணவு, மருந்துக் கடைகளின் அரங்குகளும் அமைக்கப்பட்டு இருந்தன.



Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...