கோவை : கோவையில் நடைபெற்ற அகில இந்திய அளவிலான நாய்கள் கண்காட்சியில், பல்வேறு நாடுகளை சேர்ந்த நாய்கள் செய்த சாகசங்கள் பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தியது..
கோவை : கோவையில் நடைபெற்ற அகில இந்திய அளவிலான நாய்கள் கண்காட்சியில், பல்வேறு நாடுகளை சேர்ந்த நாய்கள் செய்த சாகசங்கள் பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தியது..

ஆனைமலைஸ் கென்னல் கிளப் சார்பாக கோவையில் 11 மற்றும் 12 வது அகில இந்திய நாய்கள் கண்காட்சி கோவை ஹிந்துஸ்தான் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இதில், தமிழகம் மற்றும் நாட்டின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த மின்பின், பக், பீகிள், பூடுல், மேலினீயஸ், லாசா அப்சா, டால்மேஷன், கிரேட்டேன், ஜெர்மன் ஷெப்பர்டு உள்ளிட்ட பல்வேறு விதமான நாய்கள் மொத்தம் 44 வகை இனங்கள் கலந்து கொண்டன. இதில், சில நாய் இனங்கள் இங்கிலாந்து, அயர்லாந்து, ஆஸ்திரேலியா நாடுகளை பூர்வீகமாக கொண்ட நாய்களும் கலந்து கொண்டன. இந்தக் கண்காட்சியில் தமிழ்நாடு காவல் துறை மோப்ப நாய்களும், நாட்டு நாய் இனங்களான ராஜபாளையம், கோம்பை, சிப்பிப்பாறை, கண்ணி உள்ளிட்ட நாய்கள் செய்த சாகசங்கள் பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தியது.

இந்த கண்காட்சியில் கலந்து கொள்ளும் நாய்களுக்கு மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டு பின்னர் சிறந்த சாகசங்கள் செய்யும் நாய்களுக்கு பரிசுகள் மற்றும் கோப்பைகள் வழங்கப்படும் என கண்காட்சி ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர். கண்காட்சியில், நாய்களுக்கான உணவு, மருந்துக் கடைகளின் அரங்குகளும் அமைக்கப்பட்டு இருந்தன.
