ஈஷாவில் சத்குருவின் சங்கல்பம்’என்ற தலைப்பில் முதல்முறையாக நிகழ்ந்த தமிழ் கவியரங்கம்

கோவை : ஈஷா யோகா மையத்தில் முதல்முறையாக ‘சத்குருவின் சங்கல்பம்’ என்ற தலைப்பில் தமிழ் கவியரங்கம் நேற்று மிகச் சிறப்பாக நடைபெற்றது.

கோவை : ஈஷா யோகா மையத்தில் முதல்முறையாக ‘சத்குருவின் சங்கல்பம்’ என்ற தலைப்பில் தமிழ் கவியரங்கம் நேற்று மிகச் சிறப்பாக நடைபெற்றது.



கோவையில் உள்ள ஈஷா யோகா மையத்தில் மஹாசிவராத்திரி, குரு பெளர்ணமி, நவராத்திரி, தமிழர் திருநாளான பொங்கல் போன்ற தினங்களில் இயல், இசை, நாடகத்துடன் கொண்டாட்டங்கள் வெகு விமர்சையாக நடைபெறும். இந்த நிலையில், தமிழுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் விதமாக முதல்முறையாக தமிழ் கவியரங்கம் ஸ்பந்தா ஹாலில் நேற்று நடைபெற்றது. எழுத்தாளரும் இலக்கிய பேச்சாளருமான மரபின் மைந்தன் முத்தையா  ‘சத்குருவின் சங்கல்பம்’ என்ற தலைப்பிலான அந்த கவியரங்கத்துக்கு நெறியாளராக இருந்தார். இசைக் கவி ரமணன் ஆதியோகி குறித்தும், விவேக் பாரதி தியானலிங்கம் குறித்தும், கனகதூரிகா லிங்கபைரவி குறித்தும் கவிதை நடையில் பாடல் பாடினர்.



தமிழ் நயமிக்க இந்த கவிதைகளை கேட்பதற்காக பிரம்மச்சாரிகள், ஈஷா சம்ஸ்கிரிதி மற்றும் ஈஷா ஹோம் ஸ்கூல் பள்ளி மாணவர்கள், ஈஷா தன்னார்வலர்கள், விருந்தினர்கள் என நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர். முன்னதாக, நிகழ்ச்சியின் துவக்கத்தில் ஈஷா சம்ஸ்கிரிதி மாணவர் சுவாமி அஸ்வின் வரற்புரை நிகழ்த்தினார்.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...