கோவை : ஈஷா யோகா மையத்தில் முதல்முறையாக ‘சத்குருவின் சங்கல்பம்’ என்ற தலைப்பில் தமிழ் கவியரங்கம் நேற்று மிகச் சிறப்பாக நடைபெற்றது.

கோவையில் உள்ள ஈஷா யோகா மையத்தில் மஹாசிவராத்திரி, குரு பெளர்ணமி, நவராத்திரி, தமிழர் திருநாளான பொங்கல் போன்ற தினங்களில் இயல், இசை, நாடகத்துடன் கொண்டாட்டங்கள் வெகு விமர்சையாக நடைபெறும். இந்த நிலையில், தமிழுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் விதமாக முதல்முறையாக தமிழ் கவியரங்கம் ஸ்பந்தா ஹாலில் நேற்று நடைபெற்றது. எழுத்தாளரும் இலக்கிய பேச்சாளருமான மரபின் மைந்தன் முத்தையா ‘சத்குருவின் சங்கல்பம்’ என்ற தலைப்பிலான அந்த கவியரங்கத்துக்கு நெறியாளராக இருந்தார். இசைக் கவி ரமணன் ஆதியோகி குறித்தும், விவேக் பாரதி தியானலிங்கம் குறித்தும், கனகதூரிகா லிங்கபைரவி குறித்தும் கவிதை நடையில் பாடல் பாடினர்.

தமிழ் நயமிக்க இந்த கவிதைகளை கேட்பதற்காக பிரம்மச்சாரிகள், ஈஷா சம்ஸ்கிரிதி மற்றும் ஈஷா ஹோம் ஸ்கூல் பள்ளி மாணவர்கள், ஈஷா தன்னார்வலர்கள், விருந்தினர்கள் என நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர். முன்னதாக, நிகழ்ச்சியின் துவக்கத்தில் ஈஷா சம்ஸ்கிரிதி மாணவர் சுவாமி அஸ்வின் வரற்புரை நிகழ்த்தினார்.