நீலகிரி : குன்னூர் அருகே ரன்னிமேடு ரயில் பாதையில் குட்டியுடன் உலா வந்த காட்டு யானைகளை பர்லியார் வனப்பகுதிக்குள் வனத்துறையினர் விரட்டியடித்தனர்.

மேட்டுப்பாளையம் - குன்னூர் மலை ரயில் பாதையில் ரன்னிமேடு பகுதியில் குட்டியுடன் 9 காட்டு யானைகள் கடந்த இரண்டு தினங்களாக உலா வந்துக் கொண்டிருந்தன. இது குறித்து அப்பகுதி மக்கள் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து, வனத்துறையினர் நேரில் சென்று யானைகளை விரட்டும் பணியில் ஈடுபட்டனர். ஆனால், அங்கு பலாப்பழம், பேரிக்காய், மூங்கில் போன்ற உணவு பொருட்கள் அதிகம் கிடைப்பதால், இவை தொடர்ந்து இங்கேயே முகாமிட்டிருந்தன. இந்த யானைகள் முக்கிய சாலைகளுக்கு வந்து விடாமல் தடுக்க 4 பேர் கொண்ட வனக்குழுவினர் தொடர்ந்து கண்காணித்து வந்தனர்.

இந்த நிலையில், இவற்றை பர்லியார் வனப்பகுதிக்குள் துரத்தும் நடவடிக்கையில் வனத்துறையினர் ஈடுபட்டனர். தண்டவாளங்களில் ஒலி எழுப்பியவாறு இந்த யானைகளை துரத்தும் பணியினை மேற்கொண்டனர். இதன் தொடர்சியாக இவை பர்லியார் வனப் பகுதிக்குள் விரட்டப்பட்டன. ரன்னிமேடு ரயில் நிறுத்தம் மற்றும் குடியிருப்பு அருகில் சுற்றித்திரிந்த இந்த யானை கூட்டம் இங்கிருந்து திரும்பி சென்றதால் அப்பகுதி மக்கள் நிம்மதி அடைந்தனர்.