கோவை : நடப்பாண்டில் ரூ. 15 ஆயிரம் கோடி மதிப்பிலான குடிநீர் திட்டங்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைக்க உள்ளதாக அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தெரிவித்துள்ளார்.
கோவை : நடப்பாண்டில் ரூ. 15 ஆயிரம் கோடி மதிப்பிலான குடிநீர் திட்டங்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைக்க உள்ளதாக அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தெரிவித்துள்ளார்.
அ.தி.மு.க. கோவை மாநகர் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் அக்கட்சி தலைமை அலுவலகமான இதய தெய்வம் மாளிகையில் நடைபெற்றது. இதில், கலந்து கொண்ட பிறகு அமைச்சர் எஸ்.பி. வேலுமணி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
அப்போது, அவர் கூறியதாவது :- 2017-ஆம் ஆண்டு கடுமையான வறட்சி ஏற்பட்ட போது சமாளித்தோம். இந்த முறை மழை பொழிவு குறைவாகவே உள்ளது. லாரி மூலம் சென்னையில் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. தினமும் 9,100 லோடு லாரி தண்ணீர் சென்னைக்கு கொடுக்கிறோம். அரசு செய்யும் திட்டம் நடவடிக்கையை மக்களிடம் சொல்லுங்கள். இந்த ஆண்டு 15 ஆயிரம் கோடி மதிப்பீட்டிலான குடிநீர் திட்டங்களை முதலமைச்சர் தொடங்கி வைக்க உள்ளார். 492 குடிநீர் திட்டப்பணிகள் சென்னையில் மட்டும் நடந்து வருகிறது. சென்னையில் தினமும் 525 எம்.எல்.டி தண்ணீர் கொடுத்து வருகிறோம். கர்நாடகா மற்றும் கேரள மாநிலத்தில் தி.மு.க. கூட்டணி அரசுகள் டேம் கட்ட நடவடிக்கை எடுக்கிறது. அதை தடுக்க நடவடிக்கை வேண்டும்.
மக்கள் சிக்கனமாக தண்ணீரைப் பயன்படுத்த வேண்டும். சென்னை வர வேண்டாம், ஹோட்டலில் உணவு இல்லை என செய்தி வருகிறது. இதுகுறித்து ஹோட்டல் உரிமையாளர்களை அழைத்து தலைமை செயலாளர் தலைமையில் கூட்டம் நடத்த உள்ளோம். தண்ணீர் பிரச்சனையை எதிர்கட்சியினர் அரசியல் செய்கின்றனர். தமிழகம் முழுவதும் தண்ணீர் பிரச்சனையை கட்டுப்படுத்த குழு போட்டுள்ளோம். வறட்சியால் ஏற்பட்டுள்ள தண்ணீர் பிரச்சனையை எதிர்கட்சிகள் வேற மாதிரி கொண்டு போகின்றனர். தி.மு.க.வை பொறுத்தவரை என் மீதும், அமைச்சர் தங்கமணி மீதும் கடும் கோபத்தில் உள்ளனர். அது வேறு விசயம். உள்ளாட்சி தேர்தலை சந்திக்க தமிழக அரசு தயாராக உள்ளது, எனக் கூறினார்.