நடப்பாண்டில் ரூ. 15 ஆயிரம் கோடி மதிப்பிலான குடிநீர் திட்டங்கள் தொடங்கப்படவுள்ளது : கோவையில் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தகவல்

கோவை : நடப்பாண்டில் ரூ. 15 ஆயிரம் கோடி மதிப்பிலான குடிநீர் திட்டங்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைக்க உள்ளதாக அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தெரிவித்துள்ளார்.


கோவை : நடப்பாண்டில் ரூ. 15 ஆயிரம் கோடி மதிப்பிலான குடிநீர் திட்டங்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைக்க உள்ளதாக அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தெரிவித்துள்ளார். 

அ.தி.மு.க. கோவை மாநகர் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் அக்கட்சி தலைமை அலுவலகமான இதய தெய்வம் மாளிகையில் நடைபெற்றது. இதில், கலந்து கொண்ட பிறகு அமைச்சர் எஸ்.பி. வேலுமணி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது, அவர் கூறியதாவது :- 2017-ஆம் ஆண்டு கடுமையான வறட்சி ஏற்பட்ட போது சமாளித்தோம். இந்த முறை மழை பொழிவு குறைவாகவே உள்ளது. லாரி மூலம் சென்னையில் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. தினமும் 9,100 லோடு லாரி தண்ணீர் சென்னைக்கு கொடுக்கிறோம். அரசு செய்யும் திட்டம் நடவடிக்கையை மக்களிடம் சொல்லுங்கள். இந்த ஆண்டு 15 ஆயிரம் கோடி மதிப்பீட்டிலான குடிநீர் திட்டங்களை முதலமைச்சர் தொடங்கி வைக்க உள்ளார். 492 குடிநீர் திட்டப்பணிகள் சென்னையில் மட்டும் நடந்து வருகிறது. சென்னையில் தினமும் 525 எம்.எல்.டி தண்ணீர் கொடுத்து வருகிறோம். கர்நாடகா மற்றும் கேரள மாநிலத்தில் தி.மு.க. கூட்டணி அரசுகள் டேம் கட்ட நடவடிக்கை எடுக்கிறது. அதை தடுக்க நடவடிக்கை வேண்டும். 

மக்கள் சிக்கனமாக தண்ணீரைப் பயன்படுத்த வேண்டும். சென்னை வர வேண்டாம், ஹோட்டலில் உணவு இல்லை என செய்தி வருகிறது. இதுகுறித்து ஹோட்டல் உரிமையாளர்களை அழைத்து தலைமை செயலாளர் தலைமையில் கூட்டம் நடத்த உள்ளோம். தண்ணீர் பிரச்சனையை எதிர்கட்சியினர் அரசியல் செய்கின்றனர். தமிழகம் முழுவதும் தண்ணீர் பிரச்சனையை கட்டுப்படுத்த குழு போட்டுள்ளோம். வறட்சியால் ஏற்பட்டுள்ள தண்ணீர் பிரச்சனையை எதிர்கட்சிகள் வேற மாதிரி கொண்டு போகின்றனர். தி.மு.க.வை பொறுத்தவரை என் மீதும், அமைச்சர் தங்கமணி மீதும் கடும் கோபத்தில் உள்ளனர். அது வேறு விசயம். உள்ளாட்சி தேர்தலை சந்திக்க தமிழக அரசு தயாராக உள்ளது, எனக் கூறினார். 

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...