திருமலையம்பாளையம் பேரூராட்சியில் போடப்பட்டு வரும் தார் சாலைகளை ஆய்வு செய்த கோவை மாவட்ட ஆட்சியர்

கோவை : திருமலையம்பாளையம் பேரூராட்சியில் ரூ.1.3 கோடி மதிப்பில் போடப்பட்டு வரும் தார் சாலைகளை கோவை மாவட்ட ஆட்சியர் கு. ராசாமணி நேரில் ஆய்வு கொண்டார்.


கோவை : திருமலையம்பாளையம் பேரூராட்சியில் ரூ.1.3 கோடி மதிப்பில் போடப்பட்டு வரும் தார் சாலைகளை கோவை மாவட்ட ஆட்சியர் கு. ராசாமணி நேரில் ஆய்வு கொண்டார். 

கோவை மாவட்டம் திருமலையம்பாளையம் பேரூராட்சியில் ரூ.1.3 கோடி மதிப்பில் மாரிச்செட்டிபதி முதல் காரைகவுண்டர் தோட்டம் வரை 2.4 கி.மீ. நீளம் தார்சாலை அமைக்கும் பணியினை மாவட்ட ஆட்சியர் கு. ராசாமணி இன்று நேரில் பார்வையிட்டு களஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது, உதவி இயக்குநர் (பேரூராட்சிகள்) துவாரகநாத்சிங், வட்டாட்சியர் பழனிசாமி, பேரூராட்சி செயல் அலுவலர்கள் எஸ்.கே.எம்.காதர் ஆகியோர் கலந்து கொண்டனர். இவ்வாய்வில், சாலையினை முதல் இரண்டு அடுக்குகளை துளையிட்டு மாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார். 

பின்னர் அவர் தெரிவித்ததாவது :- கோவை மாவட்டத்தின் நகர்ப்புற கிராமப்புற மற்றும் பேரூராட்சிப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் தொகைக்கு ஏற்ப உள்ளாட்சித் துறையின் மூலம் ஒருங்கிணைந்த நகர்புற வளர்ச்சித் திட்டத்தின் கீழ் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள், குடிநீர் குழாய்கள் பொருத்துதல், மழைநீர் வடிகால் அமைத்தல், சாலைவசதிகள், தெருவிளக்கு உள்ளிட்ட பல்வேறு உட்கட்டமைப்பு மற்றும் அடிப்படை கட்டமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. அதன்படி, கிராமப்பகுதிகளின் தார்சாலைகள், நகர்ப்பகுதிகளின் தார்சாலைகளுக்கு நிகராகவும், சாலையோரங்களின் மரங்கள் நடப்பட்டு பசுமை வழிச்சாலைகளாகவும் அமைக்கப்பட்டு வருகின்றது. அதுமட்டுமல்லாமல், அனைத்து தரப்பு மக்களுக்கும் தங்குதடையின்றி குடிநீர் சேவைகள், கிராமப்புறங்களில் சிறுவர் பூங்காக்கள் என அனைத்து வசதிகளிலும் நகர்ப்பகுதிகளைக் காட்டிலும், கிராமப்புறங்களில் தன்னிறைவு பெற்ற பகுதிகளாக கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து பேரூராட்சிகள் விளங்கி வருகின்றது.

மக்களுக்காக அரசு செயல்படுத்தி வரும் அடிப்படை கட்டமைப்பு பணிகள் அனைத்தும் உரியமுறையில் மக்களுக்கு நலன் பயப்பவையாக சென்று சேர வேண்டும். மாவட்டம் முழுவதிலும் இதுபோன்ற கள ஆய்வுகள் தொடர்ந்து நடைபெறும். எனவே, வளர்ச்சித் திட்டப்பணிகளில் ஈடுபடும் அலுவலர்கள் அனைவரும், தங்களின் பணிகளின் தன்மையறிந்து அர்ப்பணிப்புடன் பணியாற்றிட அன்புடன் கேட்டுக்கொள்கிறேன், என மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி தெரிவித்தார்.

தொடர்ந்து, குட்டிக்கவுண்டன்பதி நியாய விலைக்கடையில் பொது வினியோகத் திட்டத்தின்படி, பொருட்களின் தரம் மற்றும் இருப்பு குறித்தும் நியாய விலைக்கடை பணியாளரிடம் ஆய்வு மேற்கொண்டதுடன் பொதுமக்களிடமும், உரியமுறையில் பொதுவிநியோக திட்டப் பொருட்கள் வழங்கப்படுகின்றனவா..? என கேட்டறிந்தார்.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...