நீலகிரி : குன்னூர் சிம்ஸ் பூங்கா அருகே உள்ள ஆக்கிரமிப்பு கடைகளை நெடுஞ்சாலை துறையினர் அகற்றினர்.

குன்னூரில் உள்ள முக்கிய சுற்றுலா தலமான சிம்ஸ் பூங்கா பகுதியில் நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான சாலையின் ஓரத்தில் பல ஆண்டுகளாக சாலையை ஆக்கிரமித்து சிலர் சிறு கடைகளை நடத்தி வந்தனர். இதனால், போக்குவரத்துக்கு இடையூறு இருப்பதாகவும், சுற்றுலாப்பயணிகள் சிம்ஸ் பூங்காவிற்கு அதிகளவு வருகை புரிவதால் வாகன நெரிசல் மற்றும் போக்குவரத்து பாதிப்பு உள்ளிட்ட பல்வேறு இடையூறுகள் ஏற்படுவதாக பல்வேறு தரப்பில் இருந்தும் புகார்கள் வந்தன. இதனைத் தொடர்ந்து, நெடுஞ்சாலைத்துறை உதவி இயக்குனர் பாரிஜாதம் தலைமையில் குன்னூர் காவல் துறை துணைகண்காணிப்பாளர் கிருஷ்ணமுர்த்தி முன்னிலையில் நெடுஞ்சாலையில் ஆக்கிரமிப்பு செய்து இருந்த சுமார் 50-க்கும் மேற்பட்ட சிறுகடைகளை நெடுஞ்சாலைத்துறை ஊழியர்கள் அகற்றினர்.