கோவை : தி.மு.க. முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், தொ.முச தலைவருமான ஆ.நடராசனின் 2 ம் ஆண்டு நினைவுநாளையொட்டி மலரஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது.

தொ.மு.சா. முன்னாள் பேரவைத் தலைவரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான ஆ. நடராசனின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி நிகழ்ச்சி டாடாபாத்தில் உள்ள மாவட்ட தி.மு.க. அலுவலகத்தில் நடைபெற்றது. கோவை மாநகர் மாவட்ட பொறுப்பாளர் நா.கார்த்திக் எம்.எல்.ஏ. தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், ஆ. நடராசனின் திருவுருவப் படத்திற்கு அவர் மலர்தூவி அஞ்சலி செலுத்தினார். இந்த நிகழ்ச்சியில், தி.மு.க. சொத்து பாதுகாப்பு குழு துணைத் தலைவர் பொங்கலூர் பழனிச்சாமி, மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர்கள் நாச்சிமுத்து, நந்தக்குமார், தொ.மு.ச. துணைத்தலைவர் இரத்தினவேல், முன்னாள் மாநகர செயலாளர் வீரகோபால் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
முன்னதாக, பொள்ளாச்சி சங்கை ராஜு எழுதிய "திராவிட இயக்கமும் - திராவிட முன்னேற்ற கழகமும்" (வரலாறு) என்னும் நூலை நா.கார்த்திக் எம்.எல்.ஏ. வெளியிட்டார்.